ஹெலன்
ஹெலன் ஹெரானுக்கு (Helen Herron) தனது 17ஆவது வயதில் வெள்ளை மாளிகைக்குத் தன் பெற்றோருடன் ஒரு வார கால விடுமுறைக்காகச் சென்று அங்கே தங்கியிருக்க வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது அந்த மாளிகையின் அழகால், கம்பீரத்தால் கவரப்படுகிறார். ஒரு பெண் அதிபராக முடியாது என அவருக்குத் தெரியும் அதனால் ‘நான் ஒருநாள் முதல் பெண்மணியாக இங்கு திரும்பி வருவேன்’ என்று சூளுரைத்து அதனைச் சாதித்துக் காட்டினார்.
ஹெலன் தன் வாழ்க்கையில் எல்லாச் சம்பவங்களையும் சாமர்த்தியமாகத் தன் இலக்கை அடைவதற்கான பாதையைச் செப்பனிடவே பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். கணவரைத் தேர்ந்தெடுத்தது, அவருடைய அரசியல் இலக்கை நிர்ணயித்தது என அத்தனையுமே அவருக்கு ஒரு தேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை செய்வதைப் போன்ற காய்நகர்த்தல்கள்தான்.
ஒஹையோவில் உள்ள சின்சினாட்டி நகரில், புகழ்பெற்ற சட்ட வல்லுநரான ஜான் வில்லியம் ஹெரான் (John Williamson Herron), ஹாரியட் காலின்ஸ் (Harriet Collins) தம்பதிக்குப் பதினோரு குழந்தைகளில் நான்காவது மகளாக ஹெலன் பிறந்தார். அவரது குடும்பம் மொத்தமும் நீதித்துறையிலும் அரசியலிலும் ஆழமாக வேரூன்றியிருந்தது. அவரது தந்தை, பின்னாளில் அதிபர்களாக இருந்த பெஞ்சமின் ஹாரிசன் (Benjamin Harrison), ரூதர்ஃபோர்ட் ஹேயஸுடன் (Rutherford B. Hayes) ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். ரூதர்போர்ட் ஹேயஸுடன் இணைந்து ஒரு நிறுவனமும் நடத்திவந்தார்.















Add Comment