ஈடித்
அடிரோண்டாக் விடுதியில் ஒரு நள்ளிரவு நேரம். அமெரிக்காவின் துணை அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட்(Theodore Roosevelt), தன் மனைவி ஈடித் மற்றும் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்கிறது. அதிபர் மெக்கின்லி (William McKinley) இறந்துவிட்ட செய்தி வருகிறது. தியோடர் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் அதிபராகிறார்.
யாரிந்த ஈடித்? தியோடரின் இந்த வெற்றிகரமான அரசியல் வாழ்க்கைக்கு அவர் எப்படிக் காரணமானார்? தெரிந்துகொள்ள, அவர் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டுவோம்.
1865 ஏப்ரலில் ஆபிரகாம் லிங்கனின் உடல் இல்லினாய் தெருக்களில் ஊர்வலமாகச் சென்ற பிறகு, நியூயார்க்கிலும் அப்படி ஒரு தருணம் வந்தது. அது லிங்கன் மெமோரியல் ஊர்வலம். பதினாறு குதிரைகள் பூட்டப்பட்ட இறுதி ஊர்வல வண்டி. ஆயுதம் ஏந்திய வீரர்கள், உரிமையியல் போரில் இறந்த வீரர்கள். தங்கள் வீட்டின் இரண்டாம் தளத்திலிருந்து ஆறு வயது தியோடர் ரூஸ்வெல்ட்டும், அவன் சகோதரனும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராணுவ முழக்கச் சத்தம் எழுப்பப்பட்டபோது, மூன்று வயது சின்னப் பெண் ஈடித் (Edith Carow) கத்திக் குரல் எழுப்ப, தியோ அவளை ஓர் அலமாரிக்குள் தள்ளிச் சாத்துகிறான். ஆமாம், ஈடித்தும் தியோடாரும் ஒன்றாக வளர்ந்தவர்கள்.















Add Comment