ஐடா மெக்கன்லி
அமெரிக்காவின் இருபத்தைந்தாவது முதல் பெண்மணியான ஐடா மெக்கன்லியை (Ida McKinley) பற்றித் தெரிந்துகொள்ள நாம் தொழில் புரட்சி நடந்துகொண்டிருந்த காலத்தில் ஒஹையோ மாநிலத்துக்குச் செல்ல வேண்டும்.
19ஆம் நூற்றாண்டின் ஒஹையோவில், வங்கி அதிகாரியான ஜேம்ஸ் சாக்ஸ்டன் (James Saxton) தன் மகளை வித்தியாசமாக வளர்த்தார். அக்காலத்தில் ‘பெண்கள் வீட்டை மட்டும் கவனித்தால் போதும்’ என்ற மனநிலைதான் இருந்தது. ஆனால் ஜேம்ஸ், தன் மகள் ஐடா நன்கு படிக்கவும், சுயசார்பு பெறவும் வழி செய்தார். கோடை விடுமுறையில், சர்ச் கட்டுவதற்காக ஐரோப்பிய அமெரிக்க வரலாறுகள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்திக்கொடுத்தார். மிகச் சிறந்த நடிகை என விருதுகள் பெற்றார்.
மகளுக்குத் தன் வங்கியிலேயே கேஷியராக வேலை கொடுத்தார் ஜேம்ஸ். அழகும் புத்திசாலித்தனமும் நிறைந்த ஐடா, சுற்றுலாப் பரிசாக ஐரோப்பா சென்று கலைகள் பல கற்றார். பாடல், நடனம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். ஐரோப்பாவில் கைகள் இல்லாமல் வாயாலேயே ஓவியம் வரைந்த ஓவியரைச் சந்தித்தார். இது பின்னாளில் அவருடைய மன வைராக்கியத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம் எனச் சொல்லுகிறார்கள்.















Add Comment