Home » கேட்காதவை
சிறுகதை

கேட்காதவை

லீலா அக்காவை நீண்ட காலத்திற்குப் பின் அந்தத் திருமண நிகழ்ச்சியில் சந்திப்பேன் என நான் நினைக்கவே இல்லை. அதே மலர்ந்த முகம். புன்னகையுடன் பேசும் குணம். எதுவும் மாறவில்லை .

நான் விடுமுறையில் ஊட்டியில் உள்ள என் மாமா வீட்டுக்குச் செல்வேன். அப்பொழுது அடுத்த வீட்டில் அக்கா குடும்பம் வசித்து வந்தது. உறவினர் வீடு என்பதால் உரிமையோடு அங்கு செல்வேன்.

அக்கா அப்பொழுது அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். அக்கா வீட்டில் ஐந்து சகோதரிகள். இரு சகோதரர்கள். மூத்த சகோதரி திருமணம் ஆகிவிட்டது. லீலா அக்கா இரண்டாவது. அப்பா அவரது மூத்த சகோதரியின் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பாதிப்பதில் அவ்வளவு திறமை இல்லை.

அக்கா வீட்டில் ஏழைமை நிலவினாலும் உபசரிப்பில் குறைவே இருக்காது. ஒரு தேநீராவது குடிக்கக் கொடுப்பார்கள்.

அக்கா எப்போதும் மலர்ந்து இருப்பார்கள். புன்னகை மாறா முகம். இனிமையாகப் பேசுவார்கள். என்னோடு அவர்கள் மருத்துவமனை நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வார்கள். ஏழை நோயாளிகளை எதிர்பார்ப்பின்றி கவனித்துக் கொள்வார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • Natarajan Panchanatham says:

    கேட்காதவை – சிறு கதை

    பெண்களுக்கு திருமணத்தை முடித்துவிட்டால் அத்துடன் கடமை
    முடிந்தது என்றுதான் பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அவளின்
    இல்லற வாழ்க்கையில் குறை ஏதும் இருக்கிறதா என்பதை கவனிப்பதில்லை. கணவனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை
    என்று கூறும் பெண்களிடம் அவளின் அந்தரங்க வாழ்க்கை குறித்து விசாரிக்காமல் அந்த பெண்ணத்தான் சமூகம் குறை கூறுகிறது என்ற
    கருத்தை வலியுறுத்தும் விதமாக கதையை எழுதியுள்ள ஜோசப் அருமைராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள் .

    பாபநாசம் நடராஜன்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!