பவானிக்குத் தலை வலித்தது. மதியம் புருவங்களுக்கு மேலே சிறு நெருடலாகத் தொடங்கிய வலி, இப்பொழுது நெற்றி , பின் மண்டை, கழுத்து எனப் பரவித் தலை மொத்தமும் வலித்தது. அமைதியாய் சற்று நேரம் எங்காவது அமர மாட்டோமா என இருந்தது. வீட்டுக்குப் போய் ஒரு காப்பியைப் போட்டுக் குடித்துவிட்டு சற்று நேரம் கதவை அடைத்துக் கொண்டு அறைக்குள் முடங்க வேண்டும் என நினைத்தாள். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல.
அவள் சத்தத்தை வெறுத்தாள். இரைச்சலும் நெரிசலும் நிறைந்த நகரச் சூழலில் நாளெல்லாம் கத்திக் கத்திப் பாடமெடுக்கும் ஆசிரியப் பணி. நாற்பது நிமிடங்களுக்கு ஒருமுறை ஒலிக்கும் பள்ளி மணி, மிஸ் மிஸ் என்று காலைச் சுற்றி சுற்றி வந்து கேள்விகளால் துளைக்கும் பிள்ளைகள், ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் பி.டி. மாஸ்டரின் விசில் என அவளைச் சுற்றி எப்பொழுதும் சத்தம். வீட்டைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அம்மா காலை ஐந்து மணிக்குத் தொடங்கினாள் என்றால் இரவு பன்னிரண்டு வரை கூட விடாமல் டி.வி பார்ப்பாள். அன்றைய ராசி பலனில் தொடங்கி சேனல்களை மாற்றி மாற்றி, சீரியல் பெண்கள் விதவிதமாகப் போராடுவதை , தியாகங்கள் செய்வதை வில்லத்தனங்கள் புரிவதைப் பார்த்தபடி இருப்பாள். அம்மாவுக்கு டி.வி எனில் அப்பாவுக்கு யூ டியூப் . ஜோதிடம், வானசாஸ்திரம், அமெரிக்கப் பொருளாதாரம், இலுமினாட்டிகள் சதி என யார் எதைப் பேசினாலும் விடாமல் கேட்பார். “ஹட்போன்ஸ் போட்டுக் கொண்டு கேளுப்பா” என்று ஆயிரம் முறை சொல்லியாகி விட்டது. ஆனால் அதை ஊருக்கே கேட்பதைப் போல் உரக்க வைத்துக் கொண்டு கேட்பதில் அவருக்கு அலாதி ஆனந்தம்.
பவானிக்கு ஒரே மகன். ஹரி. எட்டு வயது. வாய் பேச வராது. படிப்பும் வரவில்லை . ஆட்டிச குறைபாடு என்கிறார் டாக்டர். அவன் உலகமே வேறு. இந்த உலகத்தில் உள்ள யாரும், எதுவும் அவனுக்கு பொருட்டல்ல . நாள் முழுவதும் தன் பொம்மை கார்களை வரிசையாக அடுக்கி வைத்து விளையாடிக் கொண்டிருப்பான். அவன் உடல் தலையைத் தொட்டால் முன்னும் பின்னும் சாய்ந்தாடும் ரோலி போலி பொம்மையைப் போல் ஆடிக்கொண்டே இருக்கும் . கூடவே தேனீயின் ரீங்காரம் போல ம்ம்ம்ம்.. என்ற ஒலியும் எழுப்பியபடி இருப்பான்.















ஒலி – சிறு கதை
வேலை பார்க்கும் இடத்தில் உண்டாகும் ஒலி. வீட்டில்
தாயார் தொலைகாட்சி பார்க்கும்போது அதிலிருந்து
எழும் அதீத சப்தம் – யூ ட்யூப் பார்க்கும் அப்பா . அதிலிருந்து
உண்டாகும் சப்தம். இதையெல்லாம் கடந்து ஆட்டிஸம் குறைபாடுள்ள தன் மகன் எழுப்பும் விநோதமான ஒலி.
எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கும் அந்த தாய்
ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் தன் மகன் எழுப்பும்
ஒலி மீது வெறுப்பு வந்து அதனால் அவன் மீதும் அது பாய்கிறது.
ஆனால் அவனைக்காணவில்லை என்றதும் அவள் மனம் எப்படி துடிக்கிறது. கிடைத்ததும் எப்படி மகிழ்கிறது. ஆனால் அவன்
எப்போதும் எழுப்பும் ஒலி அவனிடமிருந்து எழவில்லை
என்றபோது அவள் மனம் துடிக்கிறது. அவன் எழுப்பும் ஒலி அவனுக்கு அவசியம் என்று டாக்டர் வேறு கூறியிருக்கிறார்.வேதனைப்படுகிறாள்.
இரவு முழுவதும் தூங்கவில்லை. மறுநாள் காலையில்
தன்மகனிடமிருந்து வந்த ஒலி அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. வேதனை மறைகிறது. அதுதான் தாயுள்ளம்.
தன்னைச் சுற்றி எழுப்பப்பட்ட ஒலிகள் அவளுக்கு தலைவலியை அதிகப்படுத்திய போதும் மகன் எழுப்பிய வலி இல்லாமல் போனபோது அந்த ஒலிக்காக அவளை ஏங்க வைத்தது தாய்ப் பாசம்.
ஆட்டிஸம் குறைபாடுள்ள ஒரு குழந்தையின் தாயின்
நிலையை அருமையாக படம்பிடித்து காட்டுவது போல்
அழகாக கதை எழுதியிருக்கும் பா.ரேவதி அவர்களுக்கு
வாழ்த்துகள்.
மெட்ராஸ் பேப்பரில் கதை வெளியாகிவிட்டது என்றால்
அந்த எழுத்தாளர் மேலும் தரமான கதைகளை/படைப்புகளை
தருவார் என்பது உறுதி.
பாபநாசம் நடராஜன்
இக்கதை தனிப்பட்ட முறையில் என்னை ஆழமாக பாதித்தது.
அழகான விவரிப்பு! சிறந்த எழுத்து!!வாழ்த்துகள்!!!