பிரிட்டனின் மன்னராகி ஒன்றரை ஆண்டுகளே ஆகிறது. அதற்குள் மன்னர் சார்லசிற்கு உடல்நிலை காரணமாகப் பொதுக் கடமைகளிலிருந்து சில காலம் ஓய்வெடுக்கும் நிலைமை வந்து விட்டது. எழுபத்தைந்து வயதான ராஜா அண்மையில் புரஸ்டேட் சம்பந்தமான ஒரு சிகிச்சைக்குள்ளானார். அதன் பின்னர் அவருக்கு ஒரு வகையான புற்று நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனால் மன்னர் அதற்கான சிகிச்சையில் ஈடுபடும் காலத்தில் பொதுக் கடமைகளில் ஈடுபட மாட்டார் எனப் பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்தது. ஆனாலும் தனிப்பட்ட அரச கடமைகளைக் கவனித்துக் கொள்வார் என்றும் சொல்லப்பட்டது.
மன்னரால் பொதுக்கடமைகளில் ஈடுபட முடியாத போது அரச குடும்பத்தின் அடுத்த வாரிசுகள் பொதுக் கடமைகளில் மன்னர் சார்பாகப் பங்கெடுத்தல் வழக்கமானதே. முடிக்குரிய இளவரசரும் அதிகம் பொதுக் கடமைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளார். அவரது மனைவி இளவரசி கத்தரீனும் அண்மையில் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதே இதற்கான காரணம்.
Add Comment