இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா?
இறப்பினைக் கண்டு அஞ்சாதவர் இந்த உலகில் இருக்க முடியாது. ஒரு சில பேர் இருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலானோர்க்கு இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்க்கை நரகம்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கக்கூடிய இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? ஒரு நாள், இரு நாள் இல்லை… பல வருடங்கள்!
நாம் பேசுவது தீர்க்க முடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து கொடுத்து நோயின் தீவிரத்தினைக் குறைத்து ஆயுளை நீட்டிப்பது பற்றி அல்ல. ஆரோக்கியமாக வாழும் ஒருவரின் ஆயுளை நீட்டிப்பது பற்றி. ஒருவர் 80 வயது வரை வாழக்கூடியவர் என்றால் அவரின் வயதினை இன்னொரு 10 முதல் 20 வருடங்கள் வரை நீட்டித்து வாழவைப்பது பற்றி. இதைக் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்து 150 அல்லது 200 வயது வரை வாழ வைப்பது பற்றி. இது சாத்தியமா? சாத்தியம் என்கிறது அறிவியல். இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் வேட்டை உயிர் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்த வரையில் புற்றுநோய்க்குத் தீர்வு கண்டுபிடிக்கும் முயற்சிக்கு அடுத்தபடி ஆயுளை நீட்டிக்கும் முயற்சியாகத்தான் இருக்கும்.
Add Comment