புற்றுநோய்த் தடுப்பு மருந்துகள்
தடுப்பு மருந்துகள் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களுக்கு எதிராக மட்டும்தான் கண்டுபிடிக்க இயலுமா? இல்லை. புற்றுநோய்களுக்கும் தடுப்பூசிகள் உண்டு. நாம் ஏற்கனவே பார்த்ததுபோல் தடுப்பூசி என்பது செயலிழக்கச் செய்யப்பட்ட ஒரு நோய்க் காரணியையோ அல்லது ஆண்டிஜென் எனப்படும் நோய்க் காரணியின் ஒரு பகுதியையோ நமது உடலுக்குள் செலுத்தி, நமது நோயெதிர்ப்புச் சக்தியினைத் தூண்டுவதே ஆகும். இதன்படி பார்த்தால் புற்றுச் செல்களும் ஒரு நோய்க் காரணியே. எனவே செயலிழக்கச் செய்யப்பட்ட புற்றுச் செல்களையோ அல்லது புற்றுச் செல்களின் ஒரு பகுதியினை மட்டுமோ நமது உடலுக்குள் செலுத்தி, புற்றுநோய்க்கு எதிரான நோயெதிர்ப்புச் சக்தியினைத் தூண்டிவிட முடியும்.
Add Comment