மந்திரச்சாவி
குட்டிச்சாத்தானின் சிறப்பு அதன் தகவமைவு. நமது தேவைக்கேற்ப அதை மாற்றிக்கொள்ள முடிவது. பொதுவாக எந்தவோர் அறிவியல் கண்டுபிடிப்பும் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்ப்பதாக இருக்கும். ஆனால் அரிதாக ஓரிரு கண்டுபிடிப்புகள், பொதுவான பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவும். உதாரணமாக மின்சாரம். அதுபோலவே ஏஐயும்.
சிக்கல்களைச் சாஃப்ட்வேர்காரர்கள் “பெய்ன் பாய்ண்ட்ஸ்” (pain points) என்பார்கள். அதாவது நாம் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்னையை இந்தச் சாஃப்ட்வேர் தீர்க்கப்போகிறது என்பதே பெய்ன் பாய்ண்ட்.
சாட்ஜிபிடியைப் பொருத்தவரை ஆரம்பத்தில் ஒரு சாதாரண “சாட் பாட்”டாகத்தான் தொடங்கியது. ஆனால் அடுத்தடுத்த வெர்ஷன்கள் வரவர நாம் எதிர்பார்த்திராத பலப்பல புதிய வசதிகள் வரத்தொடங்கின.
சாட்ஜிபிடியிடம் கேள்வி கேட்கிறோம். அது பதில் சொல்கிறது. இதை மட்டுமே செய்தால் நாம் சாட்ஜிபிடியைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று பொருள்.
அது நமக்காகப் பல்வேறு விதமான செயல்களைச் செய்து தரத் தயாராக இருக்கிறது. அப்படியொன்றைத்தான் இப்போது பார்க்கவிருக்கிறோம்.
Add Comment