Home » ‘இந்தியாவை நம்பி இஸ்ரேலுக்குச் சென்றோம்!’
இந்தியா

‘இந்தியாவை நம்பி இஸ்ரேலுக்குச் சென்றோம்!’

இஸ்ரேலில் இந்தியத் தொழிலாளர்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு கட்டடத் தொழிலாளர்கள் பணியாற்றச் சென்ற செய்தி நாம் அறிந்ததே. எதற்காகச் சென்றார்களோ அந்த வேலையைச் செய்யாமல் பளு தூக்குதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட சம்பந்தம் இல்லாத பணிகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்ற முணுமுணுப்பு கிளம்பியுள்ளது. அதைத் தவிர சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தகுதியின்மை காரணமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாய் மாறிவிட்டது என்று ஒரு பிரச்சினை சமீபத்தில் எழுந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை நீக்கிவிட்டு அவர்கள் பணியாற்றத் தடை விதித்தது இஸ்ரேல். அதனால் அந்த நாட்டில் உள்ள கட்டுமானப் பணிகள், சுகாதாரத் துறையில் பேணுதல்/ பராமரிப்பாளர் (CARE GIVING/CARE TAKERS) தொடர்பான பணிகளுக்குக் கடுமையான ஆள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இதில் இந்தியாவின் உதவியை நாடியது இஸ்ரேல். இரு நாட்டு ஒப்பந்தப்படி இந்தப் பணிகளைச் செய்ய ஆட்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இது இரண்டு விதமாகச் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அரசும் அரசும் என்ற வகையில் (Govt to Govt – G TO G) தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (National Skill Development Corporation) மூலம் ஆள்கள் தேர்வு செய்யப்படுதல். இரண்டாவது இஸ்ரேல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மனித வள நிறுவனங்கள்மூலம் ஆட்களைத் தேர்வு செய்தல்.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆள்களுக்குத் தேர்வுகளும், அங்கு சென்று தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். இரண்டு விதங்களில் தேர்வு செய்யப்பட்டதால் 70:30 என்ற விகிதத்தில் ஆள்கள் பிரித்து எடுக்கப்பட்டனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள். மேலும், ஐந்தாயிரம் தொழிலாளர்கள் சுகாதாரத்துறைக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதச் சம்பளமாக இந்திய மதிப்பில் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம்வரை வரையறுக்கப்பட்டது. இதைத் தவிர பணியிடத்தில் உணவு, உறைவிடம், மருத்துவக் காப்பீடு போன்றவையும் வழங்கப்பட்டன. இது போன்ற வேலைக்குத் துபாய், சவூதி அரேபியா போன்ற இடங்களில் வழங்கப்படும் சம்பளத்தை விட இது பல மடங்கு அதிகம் என்பதால் தொழிலாளர்கள் ஆர்வமாக முன் வந்தனர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!