Home » கொத்தடிமைகளாகும் இந்தியர்கள்
இந்தியா

கொத்தடிமைகளாகும் இந்தியர்கள்

லாவோஸில் இந்திய சைபர் அடிமைகள்

‘தனிமையில் இருக்கிறீர்களா? பேச்சுத் துணைக்கு யாருமில்லையா? உங்களுக்கு விருப்பமான பெண்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் தனிமையை விரட்டுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்’ இப்படி வரும் பாப்-அப் விளம்பரங்களில் மயங்கிப் பணத்தை இழப்போர் ஏராளம். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அது போன்ற செயலிகளையும் இணையதளங்களையும் பயன்படுத்தி ஏமார்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுவதும் யாரோ ஓர் இந்தியராக இருக்கக்கூடும். விருப்பமில்லாவிட்டாலும் சித்திரவதை செய்து வலுக்கட்டாயமாக மோசடி வேலைகளில் ஈடுபட வைக்கிறார்கள் சிலர்.

தென் கிழக்கு ஆசியக் கண்டத்தில் உள்ள, லாவோஸ் நாட்டில் போக்கியோ மாகாணத்தில் இணைய மோசடி மையங்களில் சிக்கியிருந்த நாற்பத்தேழு இந்தியர்களை மீட்டிருக்கிறார்கள். இதை, தென் கிழக்கு ஆசிய நாடுகளின் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. அவர்களில் பதினாறு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை அறுநூற்று முப்பத்தைந்து இந்தியர்களை மீட்டு, அவர்களைப் பாதுகாப்பாக இந்தியா திரும்ப இந்தியத் தூதரகம் உதவியுள்ளது. டேட்டா என்ட்ரி வேலை, அதிகச் சம்பளம் என்று கவர்ச்சி விளம்பரம் செய்து நூற்றுக் கணக்கான இந்தியர்களை சைபர் க்ரைம் அடிமைகளாகப் பயன்படுத்தியுள்ளனர்.

லாவோஸில் போக்கியோ மாகாணத்தில் உள்ளது கோல்டன் ட்ரையாங்கில் என்னும் சிறப்புப் பொருளாதார மண்டலம். பயிர்களுக்கு நடுவில் விஷச்செடிகள் போல நேர்மையாகச் செயல்படும் நிறுவனங்களுக்கு இடையில் சில போலி கால்சென்டர், க்ரிப்டோ கரன்ஸி மோசடி நிறுவனங்களும் அங்கு உள்ளன. முதலில் இணையதளங்கள் மற்றும் செயலிகள் மூலம் பெண்கள் போல போலியாகத் தொடர்பு கொள்ள வைத்து நட்பை ஏற்படுத்துகிறார்கள். பாலியல் உரையாடல்களும் பேசலாம். அந்தச் செயலிகளை உபயோகிக்கக் கட்டணம் உண்டு. தொடர்ந்து நட்பில் இருப்பவர்களை க்ரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்ய வைப்பதும் நடக்கிறது. இந்தப் பணிக்கு ஆண்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். மென்பொருளைப் பயன்படுத்தி அவர்களுடைய குரலை பெண் குரல் போல மாற்றி வாடிக்கையாளர்களுடன் பேச வைக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்