Home » புதிய அரசு, பழைய பிரச்சினை
உலகம்

புதிய அரசு, பழைய பிரச்சினை

லீ ஜே-மியுங்

தென் கொரியாவில் ஜூன் மூன்றாம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் வெற்றிபெற்றுள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட இவர், 49. 4% சதவிகித வாக்குகளுடன் ஆட்சியைப் பிடித்துள்ளார். 1997 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அதிக அளவில் மக்கள் வாக்களிக்கத் திரண்டது இம்முறைதான் (79. 4%) .

இதற்கு முன் ஜனாதிபதியாக இருந்த யூன் சுக் இயோல், ராணுவ ஆட்சியை அமல்படுத்த முயன்றதற்காகப் பதவியிறக்கப்பட்டு, சிறையில் உள்ளார். வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சென்ற ஜனாதிபதி தேர்தலில் யூனுக்கு எதிராகப் போட்டியிட்டு, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற லீ ஜே மியுங் தான், இம்முறை வென்றுள்ளார்.

எளிய குடும்ப பின்னணி கொண்டவரான லீ, சிறு வயதில் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் வேலையில் இணைந்தார். கடுமையான பணிச் சுமைகளை அவர் சமாளிக்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் மீண்டும் படிப்பைத் தொடர்ந்த அவர், மனித உரிமைகள் வழக்கறிஞர் ஆனார். 2010 இல் சியோங்னம் நகர மேயராகவும், 2018- 2021 வரை கியோங்கி மாகாண கவர்னராகவும் இருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!