Home » மூன்று துறவிகள்
இலக்கியம் உலகச் சிறுகதைகள்

மூன்று துறவிகள்

லியோ டால்ஸ்டாய்
தமிழில்: ஆர். சிவகுமார்


வோல்கா பிரதேசத்தில் வழக்கிலுள்ள ஒரு பழங்கதை

நீங்கள் ஜெபம் செய்யும்போது அஞ்ஞானிகளைப் போல வீண் சொற்களை அலப்பாதேயுங்கள்; அவர்கள் அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் தந்தையை நோக்கி நீங்கள் வேண்டிக் கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு எது தேவை என்று அறிந்திருக்கிறார்.

-மத்தேயு 6:7,8

ஆர்க்கேஞ்சலிலிருந்து ஸோலோவெட்ஸ்க் துறவியர் மடத்திற்கு ஒரு பிஷப் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தார்; அங்கே உள்ள புனிதத்தலங்களுக்குப் போகும் பல யாத்ரீகர்களும் அதே கப்பலில் இருந்தார்கள். சாதகமான காற்றும் தெளிவான வானிலையும் இருந்ததால் பயணம் சுகமாக இருந்தது. கப்பலின் தளத்தில் யாத்ரீகர்கள் சாப்பிட்டுக்கொண்டும் குழுக்களாக உட்கார்ந்து பேசிக்கொண்டும் இருந்தார்கள். பிஷப்பும் அங்கு வந்து உலாவிக் கொண்டிருந்தார்; அப்போது கப்பலின் முன் பகுதியில் ஒரு மீனவன் கடலைச் சுட்டிக்காட்டி சிலரிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்ததை அவர் கவனித்தார். நடப்பதை நிறுத்திவிட்டு அந்த மீனவன் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார். இருந்தாலும் அவருக்கு எதுவும் தென்படவில்லை; சூரிய ஒளியில் கடல் மின்னிக் கொண்டிருந்தது. மீனவன் சொல்வதைக் கவனிக்க அவர்கள் அருகே போனார்; அவரைப் பார்த்ததும் அவன் தன்னுடைய தொப்பியை எடுத்துவிட்டு பேசாமல் நின்றான்; மற்றவர்களும் தங்களுடைய தொப்பிகளை எடுத்துவிட்டு குனிந்து மரியாதை செய்தார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • எனக்கென்னவோ சுந்தர ராமசாமி(புளியமரத்தின் கதை) கடவுளாகத் தெரிகிறார்.

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!