இந்த வாரம் அறிவியல் செய்திகளில் ‘சூப்பர் கண்டக்டர்’ என்ற பதம் பல தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. எல்லா அறிவியல் பத்திரிகைகளிலும் அட்டைப்படங்களில் இந்த வாசகம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருந்தது.
‘சூப்பர் கண்டக்டர்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே ரஜினிகாந்த்தின் முகம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது. இல்லையா? சங்கதி அதுவல்ல. சினிமாவைச் சற்று மறந்துவிட்டு, உயர்நிலைப் பள்ளிக்கால அறிவியல் பாடத்திற்கு போகவேண்டும். தமிழ் மீடியம் படித்திருந்தால் ”மிகைக் கடத்திகள்” அல்லது ”மீமின் கடத்திகள்” என்று பாடம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். அதை நினைவுக்குக் கொண்டுவரவேண்டும்.
கடத்தி (conductors) என்ற பொதுச்செல் பொதுவாக மின்சாரத்தைக்க டத்தும் அனைத்தையும் குறிப்பது. மின்கடத்தி என்றும் பாடம். பெரும்பாலான உலோகங்கள் மின்கடத்திகளே. என்றால் இதில் சூப்பர் கண்டக்டர் என்பது என்ன?
மீமின்கடத்திகள் (Super Conductor) மிகத் தாழ்ந்த வெப்ப நிலைகளில் கூட மின்சாரத்தைத் தங்குதடையின்றித் தன் ஊடாகச் செல்ல விடும் பொருள் என்று எளிதாக விளங்கிக்கொள்ளலாம்.
இப்போது என்ன தலைப்புச்செய்தி?
Add Comment