விமலாதித்த மாமல்லன்
‘நரஹரி, நீங்க அண்ணாநகர் குவார்ட்டர்ஸ்லையா இருக்கீங்க’ என்றார் கோயம்பத்தூரிலிருந்து மகனின் உயர் படிப்புக்காகச் சென்னைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு வந்திருந்த சீனியர் இன்ஸ்பெக்டரான ராஜரத்தினம் பேச்சுவாக்கில்.
‘ஆமா.’
‘அங்க நமக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்காருங்க’ என்றார் குமிழியிட்ட சிரிப்புடன்.
‘கோயம்புத்தூர்காரர்னா, எனக்குத் தெரிய சான்ஸ் இல்லே’ என்றான்.
‘அவுரு கோயம்புத்தூர் கமிஷ்னரேட்டுதான். ஆனா கோயம்புத்தூர்க்காரரில்லே. அவருக்குப் பொள்ளாச்சி நேட்டிவ்’ என்றார். யாருக்கு எது நேட்டிவாக இருந்தால் எனக்கென்ன என்பதைப்போல அசுவாரசியமாக ஒப்புக்குத் தலையாட்டிவைத்து சீட்டில் உட்கார்ந்தபடி சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தான் டாக்ஸ் அசிஸ்டண்ட்டாக இருந்த நரஹரி.
‘நாக ரத்தினம்…’ என்று ஆரம்பித்தவரை இடைமறித்து, நிமிர்ந்து உட்கர்ந்தவன், ‘ஆள் கொஞ்சம் கட்டையா கட்டுமஸ்தா கருப்பா இருப்பாரா’ என்றான்.
‘ஆமா. உங்களுக்குத் தெரியுமா.’
‘தெரியு..மாவா. நா 69/8. அவர் 69/7. எங்க விட்டுக்கு எதிர்வீடுங்க. அவரோட ஒரு வயசுக் கொழந்தை ஜனனி, எப்பையும் எங்க வீட்லதாங்க இருக்கும்.’
Add Comment