Home » ஒழுங்கைத் தூக்கி விழுங்கு!
இந்தியா

ஒழுங்கைத் தூக்கி விழுங்கு!

மாதபி புரி பச்

இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான (SEBI) செபியின் தலைவர் மாதபி புரி புச் மீது கடந்த மாதத்தில் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது பங்குச் சந்தைத் தரகர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை எத்தனையோ காரணிகளால் மாற்றத்துக்கு உள்ளாகும். ஆனால் தற்போது, பங்குச் சந்தையை வழிநடத்தும் ஓர் அமைப்பின் தலைவர் மீது கூறப்பட்ட புகார்கள் பங்குச் சந்தையில் பிரதிபலித்திருக்கிறது. பங்குச் சந்தையின் வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி நடந்திருக்கிறது.

இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் – SECURITIES EXCHANGE BOARD OF INDIA (SEBI) 1988ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமற்ற அமைப்பாகத் தொடங்கப்பட்டது. பிறகு 1992ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமான அமைப்பாக உறுதிசெய்யப்பட்டது. இந்தியப் பங்குச் சந்தையில் நடக்கும் பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு செபி. பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அதானி குழுமத்தின் மீது ஹிடன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தது. அதன் மீது எந்த விசாரணையோ நடவடிக்கையோ எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்பட நான்கு குற்றங்களைச் செபி தலைவர் மாதபி புச் மீது குற்றம் சுமத்தியுள்ளது ஹிடன்பர்க் நிறுவனம்.

மாதபி புரி புச்

1966ஆம் ஆண்டு மும்பையில் மாதபி புரி பிறந்தார். அவருடைய தந்தை கமல் புரி தனியார் நிறுவன அதிகாரி. தாயார் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்ற கல்வியாளர். மும்பையில் ஃபோர்ட் கான்வென்ட் பள்ளி மற்றும் டெல்லியில் உள்ள ஜீசஸ் மேரி கான்வென்டில் பள்ளிப் படிப்பைப் படித்தார். பின்னர் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் கணித இளங்கலைப் பட்டம் பெற்று ஐஐஎம் அகமதாபாத்தில் எம்பிஏ பட்டப்படிப்பு படித்திருக்கிறார். மாதபியின் கணவர் தவால் புச் எப்எம்சிஜி துறையில் முன்னணி நிறுவனமான யூனிலீவரில் இயக்குநராகப் பணியாற்றியவர். இவர்களுக்கு ஒரே மகன் அபய். பக்கபலமாக இருந்து வழிகாட்டியாக செயல்பட்டு மாதபியின் வெற்றிக்கு உதவியவர்கள் அவருடைய கணவரும் மகனும் என்று மாதபி ஒரு குறிப்பிட்டுள்ளார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!