Home » மடகாஸ்கர் கடமுடா: புரட்சியாளரா? சர்வாதிகாரியா?
உலகம்

மடகாஸ்கர் கடமுடா: புரட்சியாளரா? சர்வாதிகாரியா?

மடகாஸ்கர் அதிபர் மைக்கேல் ராண்டிரியனிரினா

‘ஜென் ஸீ மடகாஸ்கர்’ குழுவினர் தொடங்கிய போராட்டம், ஒரு மாதத்துக்குள் மடகாஸ்கர் நாட்டில் ஆட்சியையே மாற்றியிருப்பதை நாம் அறிவோம். தலைநகர் ஆன்டனனரீவோவில் இவ்வருடம் செப்டம்பர் 25 அன்று தொடங்கிய கிளர்ச்சி, அக்டோபர் 11 அன்று அதிபர் தலைமறைவான பின் முடிவுக்கு வந்தது. தன் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி, அதிபர் பதவியையும் இழந்தார் ஆன்ட்ரி ரஜோலினா (Andry Rajoelina). அக்டோபர் 17 அன்று கர்னல் மைக்கேல் ராண்டிரியனிரினா (Col. Michael Randrianirina), மடகாஸ்கரின் புதிய அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்டார்.

யார் இந்த மைக்கேல் ராண்டிரியனிரினா?

2023 நவம்பர். அப்போது அதிபராய் இருந்த ஆன்ட்ரி ரஜோலினாவின் அரசு, ஒரு குறிப்பிட்ட நபர் மீது ‘கலகத்தைத் தூண்டிவிட்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிட்டார்’ எனக் குற்றஞ்சாட்டியது. விசாரணை எதுவுமின்றி அவரைச் சிறையிலும் தள்ளியது. அவர்தான் மைக்கேல் ராண்டிரியனிரினா.

அவரது சிறைவாசம் நியாயமற்றது என்று பெரும்பான்மை மக்கள் நம்பினர். ஆதலால் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற அழுத்தம் அரசுக்கு உருவானது. அதன் பலனாக 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் விடுதலை ஆனார் ராண்டிரியனிரினா. இன்று அவரையே தங்களுடைய அதிபராக ஏற்றுக் கொண்டுள்ளனர் மடகாஸ்கர் மக்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!