Home » மதுரைப் புத்தகக் காட்சி ரவுண்ட் அப்
புத்தகக் காட்சி

மதுரைப் புத்தகக் காட்சி ரவுண்ட் அப்

மதுரை புத்தகக் காட்சி செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் பதினைந்தாம் தேதிவரை தமுக்கத்தில் நடைபெறுகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெரிய அரங்கமாக இருப்பதால் வருவோருக்கு சோர்வு அதிகமாக இல்லை. ஞாயிறன்று காலை மாலையென இரண்டு நேரமும் சென்றோம். காலையில் இருந்ததை விட மாலையில் நல்ல கூட்டமும் இருந்தது. தினந்தோறும் மாலை நடக்கும் பேச்சரங்கில் கரு. பழனியப்பன், பாஸ்கர் சக்தி, விஷ்ணுபுரம் சரவணன், பர்வீன் சுல்தானா, கவிஞர் மனுஷ்யபுத்திரன் எனப் பலர் கலந்து கொண்டனர்.

நாம் சென்றபொழுது சாலமன் பாப்பையா பேசிக்கொண்டிருந்தார். அரங்கம் நிரம்பி, வெளியில் எல்லாம் நாற்காலிகள் போடப்பட்டு மக்கள் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். சிலர் அலைப்பேசியில் அதைப் பதிவும் செய்து கொண்டிருந்தனர். சுற்றியிருந்த அப்பளம், மஞ்சூரியன், பேல் பூரி, ஜிகர்தண்டா கடைகளில் கூட்டம் அள்ளியது. இவை இல்லாத கண்காட்சிகள் இருக்க முடியுமா?

‘புத்தகக் கண்காட்சி என்பது ஒரு சடங்கு அல்ல. இதில் உள்ளார்ந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பங்கேற்க வேண்டும். இதற்குத் தொடர்புள்ளவர்களே இதை ஆதரிக்கத் தவறினால் வேறு யார் செய்வார்கள்? வெறுமனே புத்தகங்கள் விற்கவில்லை என்று சொல்வதை விட்டுவிட்டுச் செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!