ஸ்டார்ட் அப் கம்பெனிகள் திருவிழா, செப்டெம்பர் 28, 29 தேதிகளில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது. மரபான திருவிழாக்களுக்குப் பெயர் போன மதுரையில் நிறுவனங்களுக்கான இந்த புதுமைத் திருவிழாவும் சிறப்பாக நடந்தது.
எண்ணிக்கையில் குறைவான பணியாளர்கள், குறைந்த மூலதனம், புதுமையான காலத்துக்கு ஏற்ற யோசனை. இதுதான் ஸ்டார்ட் அப் தொழில்களின் தாரக மந்திரம். இன்றைக்கு மிகப் பெரிய நிறுவனங்களாக இருக்கும் கூகுள், மெட்டா எல்லாம் இப்படிச் சிறிய யோசனையில் தொடங்கிப் பெருநிறுவனங்களாக வளர்ந்தவையே. யோசனை இருந்தால் போதும். சொந்தமாகப் பணம் இல்லை என்றாலும் கூட கடனாகவோ, முதலீடாகவோ பணத்தைக் கொடுக்கப் பலர் தயாராக இருக்கிறார்கள். வெளிநாடுகளில் இதெல்லாம் பல காலமாக இருக்கின்றன. நம்மூரில் இப்போதுதான் பிரபலமாக ஆரம்பித்திருக்கிறது. இளைஞர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் தொழில் தொடங்கப் புதிய யோசனைகளை வைத்திருக்கிறார்கள். முதலீட்டாளர்களைத் தேடுவது பெரும்பாடாக இருக்கிறது. முதலீடு செய்யும் எண்ணம் கொண்டவர்களும் நல்ல யோசனைகளைக் கண்டடைவதும் சிரமம்தான். எனவே, யோசனை வைத்திருப்பவர்களும் பணம் வைத்திருப்பவர்களும் சந்திக்கும் களத்தை உருவாக்க அரசு முயல்கிறது.
Add Comment