Home » புத்தர் படும் பாடு
இந்தியா

புத்தர் படும் பாடு

புத்தர் ஞானம் பெற்ற இடமாகக் கருதப்படும் மகாபோதி கோயில் பௌத்தர்களுடையதுதானா அல்லது இந்துக்களுக்குச் சொந்தமா என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது. இதற்கான சில அடிப்படைச் சட்டங்களை மாற்ற வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக பௌத்தத் துறவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புத்தகயாவும், மகாபோதியும் பௌத்தர்களுக்கு ஏன் புனிதமானது? ஏன் இந்துக்கள் அதனை உரிமை கொண்டாடுகிறார்கள்?

கௌதம சித்தார்த்தன் என்கிற இந்து இளவரசன் தனது இளம்வயதில் வாழ்வின் கேள்விகளுக்கு விடைதேடி வீட்டை விட்டு வெளியேறுகிறான். போதி மரத்தடியில் அவனுக்கு ஞானம் கிடைக்கிறது. பௌத்த மதத்தைத் தோற்றுவித்து அதைப் பரப்புகிறான். பின்னாளில் புத்தன் என்கிற பெயரோடு புகழ்பெறுகிறான்.

புத்தர் ஞானமடைந்ததாகக் கருதப்படும் இந்த போதிமரம் பீகார் மாநிலம் போத் கயாவில் (புத்தகயா) அமைந்திருக்கிறது. ஃபிகஸ் ரிலீஜியாசோ (Ficus Religiosa) என்கிற தாவரவியல் பெயர்கொண்ட இது, நாம் நன்கறிந்த அரசமரம்தான். மௌரியப் பேரரசர் அசோகர், தன் வாழ்நாளில் பிற்பகுதியில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டவர். புத்தகயாவில் ஒரு துறவி மடத்தையும், கோயில் ஒன்றையும் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் நிறுவினார். பின்பு கி.பி. ஆறாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசில் இப்போது இருக்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!