2026 அம்பாசிடர் காருக்கு ஒரு ‘கம் பேக்’ வருடமாக இருக்கப் போகிறது. இந்திய கார் சந்தையில் கிட்டத்தட்ட 55 வருடங்கள் தன்னிகரில்லா மன்னனாக இருந்த அம்பாசிடர், 2015இல் தனது தயாரிப்பை நிறுத்தியது. இப்போது மீண்டும் அடுத்த வருடம் இந்தியாவில் புதுப் பொலிவுடன் களமிறங்கப் போவதாக வெளியாகியுள்ள அறிவிப்பு கார் பிரியர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
அம்பாசிடர் காரை பிர்லா குழுமத்தின் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் 1957இல் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ததிலிருந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டு தனக்கெனப் போட்டியே இல்லாமல் இந்தியச் சாலைகளில் வலம் வந்தது. அந்தக் காலகட்டத்தில் மிக அதிக இறக்குமதி வரிகள் காரணமாக வெளிநாட்டுக் கார்களின் விலைகள் பெரும்பாலான இந்தியர்களுக்கு எட்டாக்கனியாக இருந்தன. ஆனால் அம்பாசிடர் இந்தியாவில் மேற்கு வங்கத்திலேயே தயாரிக்கப்பட்டதால் அதன் விலை ஒப்பீட்டளவில் மிகக் குறைவு. 1957இல் அதன் அறிமுக விலை வெறும் 14,000 தான்.
குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதலமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் என அரசாங்க வாகனமாகவும், நடிகர் நடிகைகள், வர்த்தகப் பிரபலங்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமான காராகவும் இருந்தது அம்பாசிடர்.














Add Comment