இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள சிறிய தீவு நாடு மாலத்தீவு. மாலத்தீவின் தலைநகர் மாலே. நாட்டின் மக்கள்தொகை சுமார் 6,00,000. அழகிய கடற்கரைகள், தெளிந்த கடல் நீர்ப்பரப்புக்குப் பெயர் பெற்றது இத்தீவு நாடு. சுற்றுலாப் பிரியர்களின் கனவு தேசமான மாலத்தீவு, தன் வரலாற்றுச் சிறப்புமிகு முன்னெடுப்பால் கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி உலகச்செய்தி ஊடகங்களின் தலையங்கங்களை ஆக்கிரமித்தது.
மாலத்தீவில் 2007 ஜனவரி ஒன்றாம் தேதிக்குப் பின் பிறந்தவர்கள் யாரும் இனி எந்த வடிவிலும் புகையிலையை வாங்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ முடியாது. சிகரெட், சிகார், புகையிலைச் சுருட்டுகள் உட்பட எந்த வடிவிலான புகையிலைப் பொருட்களுக்கும் அனுமதி இல்லை. தற்போது பதினெட்டு அல்லது அதற்கும் குறைந்த வயது உடையவர்கள் பெரியவர்களாக ஆனாலும் கூட வாழ்நாள் முழுவதும் சட்டப்படி புகைபிடிக்க முடியாது. இதனால் உலகில் முதன்முறையாகத் தலைமுறை ரீதியான புகைபிடிப்புத் தடையை அமல்படுத்திய நாடு என்ற பெருமையை மாலத்தீவு பெற்றுள்ளது.














Add Comment