இலங்கையில் நடந்த மக்கள் புரட்சியின் நேரடி வருணனை. கோட்டபாய ராஜபக்ச ‘பதவி விலகுவதாக’ அறிவித்தது அநாவசியமானது; உண்மையில் அவர் மக்களால் நீக்கப்பட்டிருக்கிறார் என்பதைப் புரிய வைக்கிறது இக்கட்டுரை.
‘கோட்டா கோ ஹோம்’ என்று தொண்டை கிழியக் கத்தினது எல்லாம் போதும். இனி முடிவைப் பார்த்துவிடலாம்.’
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவைத் துரத்தியடிக்க நாள் குறித்தார்கள் காலி முகத் திடல் போராட்டக்கார்கள்.
‘அரசியல் கட்சிகளின் ஆதரவு எதுவுமே தேவை இல்லை’ என்று தன்னிஷ்டத்திற்கு போராட்டம் செய்து வந்த போராட்டக்காரர்கள் இம்முறை தம் கொள்கையைத் தூக்கி கோல் ஃபேஸ் கடலில் வீசி விட்டுச் சற்று இறங்கி வந்தார்கள்.
ஆரம்பத்தில் பெரும் வீரியமுடன் ஆரம்பமான போராட்டம், இடையில் ஜனதா விமுக்தி பெரமுன போன்ற இடதுசாரிக் கட்சி ஆதரவாளர்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் ஒரு தேக்க நிலை ஏற்பட்டு இருந்தது. எல்லா வேறுபாடுகளையும் மறந்து ஒரு பொது நோக்கத்தில் ஒன்று கூடுவதற்கு இது பெரும் தடைக்கல்லாய் மாறி இருந்தது…
Very nicely explained indeed. Hope Sri Lanka comes out of this situation strongly.
Whom you r expecting to bring good fortunes for srilanka…there will be a celebration in mass protest.but after that…..