மிஸ்டர் சந்திரமௌலி, மிஸ்டர் சந்திரகுமார் யாரென்று தெரியுமல்லவா. தமிழ் சினிமாவில் மிக அரிதாக, அழகாக, நெகிழ்வாகக் காண்பிக்கப்படும் ஒரு உறவு மாமனார்- மருமகன் உறவு. இத்தனையாண்டுகள் ஆனாலும் மௌனராகம் படத்தில் இவர்கள் இருவருக்கும் நடக்கும் சிறிய சம்பாஷனைகள் இன்றும் நினைவில் இருப்பதற்கு காரணம் அதன் அரிதான தன்மை மட்டுமே. மாமனார்- மருமகன் குறித்த படங்கள் மிக மிகக் குறைவாகவே வந்துள்ளன. மாமியார்- மருமகள்கள் குறித்த திரைப்படங்கள் ஏராளம். அந்த அளவு மிகச் சிறிய முக்கியத்துவம், ஏன்…. முக்கியத்துவமே அல்லாத ஒரு உறவு தான் மாமனார்- மருமகன் உறவு.
பொதுவாழ்க்கையில் இது இன்னும் சகஜம். தனது மாமனாரைப் பற்றிய மருமகன்கள் அபிப்பிராயம் என்னவாக இருக்கலாம். ‘அவருக்கு ஒன்றும் தெரியாது.’ ‘அந்தாளு ஒரு கோமாளி.’ ‘அவர் ஒரு அப்பாவி.’ ‘மகா மோசமான ஆள் அவர்.’ ‘தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருப்பார் அவ்வளவு தான்.’ ‘அவரைப் பற்றிப் பேசவே பிடிக்கல.’ ‘அவர் பெரிய ஆள் நம்மளையெல்லாம் மதிக்கக்கூட மாட்டார்.’ -இதில் ஒன்று தான் இருக்கக்கூடும். அந்தளவு குடும்ப உறவுகளில் கடைசி வட்டத்தில் வைத்துக் கையாளப்படும் உறவு மாமனார் உறவு.
Add Comment