Home » புதன் என்றால் மெட்ராஸ் பேப்பர் மற்றும் வைரம்
விண்வெளி

புதன் என்றால் மெட்ராஸ் பேப்பர் மற்றும் வைரம்

ஒரு நிகழ்ச்சிக்கு மைக் செட் ஏற்பாடு பண்ணுவதெல்லாம் ஒரு காலத்தில், எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா? மேடையை எத்தனை பெரிதாக அடித்தாலும், அதற்கேற்ற ஒலிபெருக்கி அமைந்தால்தான் மொத்த அரங்கமும் நிறைந்தது போல இருக்கும். ஆனால் இப்போது, ஆளுக்கொரு பஃபர் செட்டோடு அலைகிறோம். கண்டவர் கையிலெல்லாம் ஒலிவாங்கியும் லவுட் ஸ்பீக்கரும் தாண்டவமாடுகின்றன. விண்வெளித் தொழில்நுட்பத்தின் பக்கவிளைவுகள்தானே இந்த எல்லாமே. இப்போது கூட, நாஸா ஏதோ பென்னாம் பெரிய வைரத்தைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்து இருக்கிறது. இனி பூலோகத்தினர் அனைவரும் ஆளுக்குப் பத்துக் கிலோ வைரத்தோடு வாழ்ந்தாலும் ஆச்சரியமில்லை. பெரும் மதிப்புடனும் கேள்வியுடனும் இருந்த பல பொருள்கள் இப்போது அனைவருக்கும் சர்வ சாதாரணமாகக் கிடைக்கின்றன. அந்த வரிசையில் இனி, புதன் கிரகத்தில் மட்டும் நாஸா வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைத்து விட்டால், நாம் அனைவரும் வைர முதலாளிகள்தான்.

புதன் என்பது நமது கோள் மண்டலத்திலுள்ள குழந்தை. மிகச் சின்னதாக இருப்பதாலும், சூரியத்தாயின் சேலைத் தலைப்பினுள்ளே சுற்றிக் கொண்டிருப்பதாலும் அப்படிச் சொல்லலாம். மற்றபடி, மிக மிகச் சூடான கிரகம் அது. இங்கிருந்து பார்க்கையில் தெரியும் அதே கதிரவனை, புதன் மேற்பரப்பிலிருந்து பார்த்தால் மும்மடங்கு பெரிதாகக் கோரமாகத் தெரியும். மிக அருகாமையில் அடிக்கும் பலமான சூரியக் கதிர்ப்பைத் தாங்குவதற்கென்று, புதனின் மேற்பரப்பு, கடினமான பாறைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!