தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாஃப்ட், பாகிஸ்தானில் தனது 25 ஆண்டுகால செயல்பாட்டை நிறுத்திக்கொண்டு வெளியேறியுள்ளது. இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவல்ல. மைக்ரோசாஃப்டின் சமீபத்திய பணியாளர் குறைப்பு, செலவுக் குறைப்பு நடவடிக்கைகளைக் கவனிப்பவர்களும், அந்நாட்டின் அரசியல், பொருளாதாரச் சூழலை அறிந்தவர்களும் இது எதிர்பார்த்ததுதான் என்கிறார்கள். 2022ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானில் தனது விரிவாக்கத்திற்காகத் திட்டமிட்டு, பின் அந்தச் செயல்பாடுகளை வியட்நாமிற்குக் கொண்டு சென்றதையும் குறிப்பிடுகிறார்கள்.
2000ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்டின் முதல் நேரடி அலுவலகம் பாகிஸ்தானில் துவங்கப்பட்டது. மைக்ரோசாஃப்ட் பாகிஸ்தானின் முதல் நிறுவனத் தலைவரான ஜவாத் ரெஹ்மான், அதை வழிநடத்திய பெருமையைப் பெற்றார். அவர் இதைத் துணிச்சலான, நம்பிக்கை நிறைந்த பணி என்றும் விவரித்தார். இது பாகிஸ்தானின் டிஜிட்டல் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. கடந்த 25 ஆண்டுகளாக அங்கு செயல்பட்ட மைக்ரோசாஃப்ட் வணிகரீதியாகவும், சமூகரீதியாகவும் பாகிஸ்தானிற்குப் பல சேவைகளையும், பங்களிப்பையும் வழங்கியுள்ளது.














Add Comment