காலை வேளை. அலுவலகத்துக்குக் கிளம்ப வேண்டும். அன்று அணிந்துகொள்ள ஆடைகளை எடுக்க அலமாரியைத் திறக்கின்றீர்கள். மடித்து சலவை செய்துள்ள துணிகள் சில. அரைகுறையாக மடித்து வைக்கப்பட்ட துணிகள் சில. சுருட்டி உள்ளே வைத்துள்ள டி-ஷர்ட்டுகள் சில என்று அலமாரி முழுவதும் துணிகளால் நிறைந்துள்ளன.
அலுவலகத்துக்கு ஒரு சட்டை பாண்ட் மட்டுமே தேவை. ஆனால், அதைத் தேர்ந்தெடுக்க மூன்று பாண்ட்கள், இரண்டு சட்டைகள் வெளியே வருகின்றன. அதில் ஒன்றை அணிந்து பார்த்து, அதைக் கழட்டி மற்றொன்றை மாட்டிக்கொண்டு அலுவலகம் கிளம்புகிறீர்கள். அலுவல வேலைப் பளுவில், ஆடைகளுக்கு நேரத்தை வீணடித்து விட்டோம் என்று வெறுப்பு காலையிலேயே மண்டைக்குள் செல்கின்றது. “அட ச்சே… அலுவலகம் செல்ல நல்ல ஷர்ட் இல்லை. புதுசா நாலு ஷர்ட் வாங்கணும்” என்று மனக்கணக்கு போடுகிறீர்கள். கலைக்கப்பட்ட ஆடைகள் கட்டிலில் காலை விரித்து இளைப்பாறுகின்றன. நாளை அவை சுருட்டி அலமாரிக்குள் வைக்கப்படும்.
தொண்ணூறு சதவீத வீட்டில், வாரத்தில் ஒரு நாளாவது இப்படி நடக்கும் வாய்ப்பு அதிகம். காலை நேரங்கள் அவசர அவசரமாகத்தான் எல்லோருக்கும் செல்லும். அதில் ஆடைக்கு நேரத்தை வீணடிப்பது அநாவசியம் என்று தெரிந்தாலும், நம்மில் பலர் அதைச் சரிப்படுத்தக் கஷ்டப்படுகிறோம். இந்தப் பிரச்சனைக்கு ஆண் பெண் வேறுபாடுகள் இல்லை. மிடில் கிளாஸ் மக்கள் முதல் அப்பர் கிளாஸ் மக்கள் வரையில் இது பொருந்தும்.














Just spend a minute the previous night for next day’s dress. Simple. I am following and it is helpful.