முன்னணி வங்கியான ஐசிஐசிஐ சமீபத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை (Minimum Account Balance) ஐந்து மடங்கு உயர்த்தி அறிவித்திருந்தது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தொடங்கப்படும் சேமிப்புக் கணக்குகளுக்கு இது பொருந்தும் என்று சொல்லியிருந்தது. இந்த அறிவிப்புக்கு நாடெங்கும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
மினிமம் பேலன்ஸ் என்றால் என்ன? அதற்குச் சட்டப்பூர்வமான அனுமதி உள்ளதா? இதுபோன்ற கட்டணங்களிலிருந்து எப்படி நம் பணத்தைப் பாதுகாப்பது? பார்ப்போம்.
வங்கிகள் தங்கள் கிளைகளை நகரம், சிறுநகரம், கிராமப்புறம் என்று பிரித்து அதற்கேற்ப விதிமுறைகளை அமைக்கின்றன. ஒவ்வொரு வங்கியும் தன்னுடைய அன்றாடச் செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் முதலீடுகளை ஈடுசெய்வதற்காக வாடிக்கையாளர்கள் ஒரு குறைந்தபட்ச இருப்புத் தொகையைத் தங்கள் கணக்கில் பராமரிக்க வலியுறுத்துகிறது. இந்தத் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து இருபத்து ஐந்தாயிரம் வரை வங்கிக்கு வங்கி மாறுபடும். அப்படிப் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.














Add Comment