Home » எட்டாவது மிஷனும் ஒன்பதாவது மிஷனும்
வெள்ளித்திரை

எட்டாவது மிஷனும் ஒன்பதாவது மிஷனும்

மிஷன் இம்பாசிபிள்

மிஷன் இம்பாசிபிள் ​எட்டாவது படம் வெளியாகியுள்ளது. இவ்வரிசைத் திரைப்படங்களின் எட்டாவது திரைப்படம் இது. கடைசிப்படமாகவும் இருக்கலாம். ஒரு கணிப்பொறி நிபுணர். ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட். ஒரு சாகச இளைஞன் என ஆரம்பித்ததுதான் மிஷன் இம்பாசிபிள்.

ஹாலிவுட் அல்லது அமெரிக்கப் படவுலகிற்குத் தங்களுக்கென்று ஜேம்ஸ் பான்ட் போல ஒரு பாத்திரம் இல்லையென்று ஒரு வருத்தம் இருந்திருக்கும். ஜாக்ரயன், ரீச்சர், ஜேசன் பார்ன் என அடுத்தடுத்து வந்தாலும் இந்த வருத்தம் குறையவில்லை. எம்ஐ6 போன்ற ஒரு பாதுகாப்பு நிறுவனம். அது நடத்தும் ஒரு ரகசிய உளவாளிக் குழு. இதுதான் லட்சியம். வந்தது ஐஎம்எப் (Impossible mission force). சாதாரண அதிகாரிகளால் எளிதில் செய்ய முடியாத வேலைகள் இருக்கிறதா. கூப்பிடு ஐஎம்எப்பை. இதுதான் தாரக மந்திரம். அரசுப்பணி. நாட்டைக் காக்கும் வேலை. ஆனால் இப்படியொரு அமைப்பு இருப்பதே தெரியாது. எதிரி நாட்டில் மாட்டினால் கைகழுவி விடும் அரசு. அவர்கள் பாதுகாப்புக்கு அவர்கள்தாம் பொறுப்பு.

1996 இல் ப்ரியன் டி பால்மா முதல் படத்தை இயக்கினார். மிகவும் முக்கியமான நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும் ரகசியம் ஒரு பிளாப்பி டிஸ்கில் இருக்கிறது. அதைக் கைப்பற்ற வேண்டும். அதுதான் டாஸ்க். அதி உன்னதமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட ஓர் இடத்திலிருந்து அதைக் கைப்பற்ற வேண்டும். அதைச் செய்ய ஈதன்ஹன்ட் என்பவர் அனுப்பப்படுகிறார். இந்தப் படம் வெளியாகும்போது இந்தப் படக்குழுவினர் அது அவ்வளவு பெரிய வெற்றி பெறும். ஈதன் ஹன்ட் மிகப்பெரிய ஒரு பெயரைப் பெறுவார் என்று நினைத்திருக்க மாட்டார்கள். அந்தப்படத்தின் சண்டைக்காட்சிகளை மீறி ஒரு விஷயம் வரவேற்பைப் பெற்றது. அது அந்தப்படத்தின் தீம் ம்யூசிக்தான். லாலு ஷப்ரின் எழுதி இசையமைத்த அந்த இசைக்கோர்வை படம் வெளியாகி முப்பது ஆண்டுகளை நெருக்கியும் மாறவே இல்லை. இதுவரை வந்த அனைத்துப் படங்களிலும் இந்த இசை தவறாமல் பயன்படுத்தப்படுகிறது. சிக்னேச்சர் இசை என்று சொல்வார்களே அதுபோல. படத்தின் பெயரைச் சொன்னதும் இந்த இசை காதில் ஒலிக்கும் அளவு பிரபலம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!