Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 18
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 18

18. அந்த இருபது பேர்

கோகலே தென்னாப்பிரிக்காவுக்கு வந்ததும் அங்குள்ள மக்களிடம், ஆட்சியாளர்களிடம் பேசியதும் 1912ல். அப்போது அவர் போட்ட கணக்கின்படி, அங்குள்ள இந்தியர்களுடைய துன்பங்களெல்லாம் 1913ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிடும், காந்தியும் மன நிறைவோடு இந்தியாவுக்குத் திரும்பிவிடுவார்.

காந்திக்குக் கோகலேவின் இந்தக் கணக்கில் நம்பிக்கை இல்லை. ‘தென்னாப்பிரிக்க ஆட்சியாளர்கள் அத்தனை எளிதாக இறங்கிவந்துவிடமாட்டார்கள், இன்னும் கடுமையான போராட்டங்கள் தேவைப்படும், நிறையப் பேர் சிறைக்குச் செல்லவேண்டியிருக்கும்’ என்று அவர் கணித்தார், அதைக் கோகலேவிடமும் நேரடியாகச் சொன்னார்.

இந்தப் போட்டியில் யார் வென்றார்கள்?

இருவரும் வெல்லவில்லை, அதே நேரம், இருவரும் தோற்கவில்லை. இந்த டெஸ்ட் போட்டி இருதரப்புக்கு வெற்றி, தோல்வி இல்லாமல் ‘டிரா’வில் முடிவடைந்தது.

கோகலே சொன்னதுபோல் சுமார் ஓராண்டில் தென்னாப்பிரிக்கச் சிக்கலுக்குத் தீர்வு கிடைத்துவிட்டது. ஆனால், அந்தத் தீர்வு கடும் போராட்டங்களுக்குப்பிறகுதான் கிடைத்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!