Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 19
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 19

19. பேசக்கூடாது

நீண்ட இடைவெளிக்குப்பின் நிரந்தரமாக இந்தியா வரவிருந்த காந்திக்குக் கோகலே விதித்த இன்னொரு கட்டளை, ஓராண்டுக்கு அவர் தன்னுடைய கண்களையும் காதுகளையும் நன்றாகத் திறந்துவைத்திருக்கவேண்டும், ஆனால், வாயை இறுக மூடிக்கொள்ளவேண்டும். அதாவது, அரசியல் பேசக்கூடாது, இந்திய விடுதலைப் போராட்டத்தை மேம்படுத்துவதற்கு இதுதான் வழி என்று எந்த உத்தியையோ போராட்ட முறையையோ முன்வைக்கக்கூடாது, போராட்டங்களில் ஈடுபடக்கூடாது.

அதுவரையிலான காந்தியின் வாழ்க்கையை அறிந்தவர்களுக்கு இந்தக் கட்டளை பெரும் திகைப்பைத் தரலாம். தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கும் இனவெறிக்கும் எதிராக வரலாறு காணாத ஒரு போராட்டத்தை நடத்தி வெற்றிபெற்றிருக்கிறவர், ஏராளமான மக்களை ஒன்றுதிரட்டி, ஊக்குவித்து வழிநடத்தத் தெரிந்த தலைவர், உழைப்புக்கு அஞ்சாத களப் பணியாளர், உயர்ந்த நோக்கங்களுக்காகச் சிறை சென்றவர், பாமரர்களோடும் ஆட்சியாளர்களோடும் அவரவர் மொழியில் பேசத் தெரிந்த திறமையாளர்… இப்படி ஒருவர் இந்திய விடுதலைப் போராட்டத்துக்குப் பங்களிக்க வருகிறார் என்றால் அவருடைய சேவையை முதல் நாளிலிருந்து முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டாமா? ‘ஓராண்டுக்கு எதுவும் பேசாமல் சும்மா இரு’ என்று அவரை முடக்கிவைப்பதால் என்ன லாபம்?

நமக்கே இப்படித் தோன்றுகிறது என்றால், பல ஆண்டுகளாகக் காந்தியின் இந்திய வருகைக்காகக் காத்திருந்த கோகலே இதையெல்லாம் யோசிக்காமலா இருப்பார்? அவர் காந்தியை ஓராண்டுக்கு அமைதியாக இருக்கச்சொன்னதற்கு ஒரு நியாயமான காரணம் இருந்தது.

காந்தியின்மீது கோகலேவுக்கு முழு நம்பிக்கை உண்டு. எந்த நாட்டிலும், எந்தச் சூழலிலும் அவரால் திறமையுடன் செயல்பட்டு வெற்றியடையமுடியும் என்றுதான் கோகலே நம்பினார், அதனால்தான் பல ஆண்டுகளாகக் காந்தியின் அறிவிக்கப்படாத செய்தித் தொடர்பாளரைப்போல் செல்லும் இடமெல்லாம் அவருடைய புகழைப் பேசிக்கொண்டிருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!