77. மலையேற்றப் பயிற்சி
காந்தியின் ஆசிரமத்துக்கு விடுமுறை உண்டா?
நாட்டுச் சேவைக்கு வாழ்வை அர்ப்பணித்துவிட்டவர்களுக்கு விடுமுறையெல்லாம் கிடையாது. ஆனாலும், வாரத்துக்கு ஒன்றரை நாட்கள் வழக்கமான வேலைகள் சற்று மாற்றியமைக்கப்படும், ஆசிரம உறுப்பினர்கள் தங்களுடைய தனிப்பட்ட வேலைகளைச் செய்வதற்கு இடம் கிடைக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை ஆசிரமத்தில் உள்ள அனைவரும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லப்படுவார்கள். ஆனால், இது பெரும்பாலும் கால்நடைச் சுற்றுலாவாகத்தான் இருக்கும். உடல்நிலை அனுமதிக்கிற அனைவரும் நடந்தேதான் வரவேண்டும்.
ஆசிரமத்தில் தங்குகிற மாணவர்கள் அல்லது புதியவர்களுடைய மாதச் செலவுகளுக்கென அவர்களிடம் எந்தக் கட்டணமும் பெறப்படாது. ஆனால், அந்த மாணவர்களுடைய பெற்றோர் அல்லது ஆசிரமத்தில் உறுப்பினர்களாகிவிட்ட தேர்ந்தவர்கள் அதன் செயல்பாடுகளுக்குத் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
Add Comment