88. ஞாலத்தின் மாணப் பெரிது
சத்தியாக்கிரக ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிந்ததும், அதுவரை காந்திக்கு நன்கொடை வழங்கிக்கொண்டிருந்த அகமதாபாத் பெரிய மனிதர்கள் அனைவரும் மொத்தமாகக் கையைத் தூக்கிவிட்டார்கள், ‘இனிமேல் நாங்கள் உங்களுக்கு உதவுவதற்கில்லை.’
அன்றைக்குக் காந்தியின் முதன்மை ஆதரவாளராக இருந்த மங்கள்தாஸ் கிரிதர்தாஸ் மிகவும் கட்டுக்கோப்பான இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நாள்தோறும் வெளியில் வேலைக்குச் செல்லும்போது பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கவேண்டியிருக்கும், அவர்கள் தொட்ட பொருட்களைத் தொடவேண்டியிருக்கும் என்பதால், மாலை வீடு திரும்பியதும் நன்றாகக் குளித்துத் தன்னைப் ‘புனிதப்படுத்திக்கொண்டுதான்’ அவர் வீட்டுக்குள் நுழைவார்.
அப்படிப்பட்ட மனிதர் ‘தீட்டுப்பட்டுவிட்ட’ ஆசிரமத்துக்கு உதவுவாரா? அடுத்த மாதத்திலிருந்து காந்திக்கு எந்த நன்கொடையும் வராதபடி தடுத்து நிறுத்திவிட்டார் அவர்.
Add Comment