95. பேசத் தெரியாதவர்
அம்ரேலி, ஹடாலா ஆகிய பகுதிகளைப் பார்வையிட்டபின் டிசம்பர் 12 அன்று காந்தி பகசரா-வுக்கு வந்தார். இங்கு ராதிலால் மோதிசந்த் என்பவருடைய பருத்தி விதை நீக்கல், நெசவுத் தொழிற்சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசினார். இந்தக் கூட்டத்தில் கோகலே நினைவகத்துக்கு ரூ. 250 நிதி திரட்டப்பட்டது.
மறுநாள் (டிசம்பர் 13), காந்தி லிம்ப்டி-க்கு வந்தார், அங்கு நான்சந்த்ஜி மகாராஜ் என்ற துறவியைச் சந்தித்தார். அடுத்த நாள் (டிசம்பர் 14) லிம்ப்டி அரசர் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காந்தி பங்கேற்றார், பின்னர் அங்கிருந்து வாத்வானுக்குப் புறப்பட்டார்.
வாத்வான் மக்கள் காந்தியை ஊர்வலமாக அழைத்துச்சென்று பெருமைப்படுத்தினார்கள். டிசம்பர் 14, 15 ஆகிய நாட்களில் அங்கு இரண்டு கூட்டங்களில் பங்கேற்றபின் காந்தி த்ரங்கத்ரா-வுக்குப் புறப்பட்டார். அங்கு ஒரு பொதுக்கூட்டத்திலும், Modh சமூகத்தினர் நடத்திய விழா ஒன்றிலும் அவர் பங்கேற்றார்.
டிசம்பர் 16 அன்று வீரம்காமில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கோகலே நினைவகத்துக்கு நிதி திரட்டும் பயணம் தாற்காலிகமாக நிறைவடைந்தது. அதே நாளில் காந்தி அகமதாபாத் திரும்பினார்.
Add Comment