Home » எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 96
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 96

96. ஜம்னாலாலின் புதுக்கார்

காந்தியின் ஆசிரமக் கொள்கைகளில் ஒன்று, தேவையான பொருட்களைமட்டும் வாங்குவது, வீணாகப் பொருட்களை வாங்கிக் குவிப்பதைத் தவிர்ப்பது.

எடுத்துக்காட்டாக, ஒருவர் தரையில் அமர்ந்து படிக்கலாம், குறிப்பேட்டை மடியில் வைத்துக்கொண்டு எழுதலாம், இன்னும் பல அலுவல்களைச் செய்யலாம். அப்படியானால், அவருக்கு நாற்காலி, மேசை போன்றவை தேவையில்லை.

காந்தி இந்தக் கொள்கையை ஆசிரமத்தில்மட்டுமின்றி, தான் பயணம் செய்த இடங்களிலெல்லாமும் பின்பற்றினார். எடுத்துக்காட்டாக, 1915 டிசம்பரில் மும்பை மார்வாரி வித்யாலயா-வில் தங்கியிருந்த காந்தி எப்போதும் தரையில்தான் அமர்ந்திருந்தார். அவரைப் பார்க்க வருகிறவர்களும் தரையில்தான் அமரவேண்டும். யாராவது மேற்கத்திய உடையோடு வந்தால், அவர்களுக்குமட்டும் ஒரு நாற்காலி கொண்டுவரப்படும்.

ஒருநாள், மார்வாரி வித்யாலயா-வில் காந்தி எதையோ மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த காகாசாகிப், ‘பாபுஜி, நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்?’ என்று விசாரித்தார்.

‘என்னுடைய பென்சிலைத் தேடுகிறேன்’ என்றார் காந்தி.

‘அவ்வளவுதானே? இதை வைத்துக்கொள்ளுங்கள்’ என்று தன்னிடமிருந்த ஒரு பென்சிலை எடுத்து நீட்டினார் காகாசாகிப்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!