சில நூற்றாண்டுகள் பாரம்பரியம் கொண்ட மயிலாப்பூர் பங்குனிப்பெருவிழாவும், அறுபத்து மூவர் உற்சவமும் இந்த வாரம் நிறைவுற்றது. என்ன விசேஷம் இந்தத் திருவிழாவில்? ஏன் இதற்கு வரலாற்று முக்கியத்துவம்? பங்குனிப் பெருவிழாவில் என்னென்ன விசேஷங்கள் நடக்கின்றன?
மயிலாப்பூரில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு ஏழாம் நூற்றாண்டிலிருந்து வரலாறு உள்ளது. திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப் பெற்ற கோயில். அவர் ’கடலலைகள் தீண்டும் கபாலீச்சரம்’ என்று பாடியிருப்பதன் வாயிலாக, இக்கோயில் அப்போது கடற்கரையோரமாக இருந்திருக்க வேண்டும் என்று கணிக்கின்றனர். அப்போது மைலாப்பூர், கடற்கரை வரை நீண்டிருந்ததாகப் போர்ச்சுக்கீசியர்களின் வரலாற்றுக் குறிப்புகளிலிருந்தும் அறிந்துகொள்கிறோம்.
போர்ச்சுக்கீசியர்கள் சென்னையைக் கைப்பற்றியபோது, இந்தக்கோயில் அழிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் உள்ளன. பிறகு விஜயநகர மன்னர்களால் பதினைந்தாம் நூற்றாண்டில் இப்போது உள்ள இடத்தில் புதிய கோயில் கட்டப்பட்ட திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது.
அப்போதிலிருந்தே பழைய திருவிழாக்கள் அனைத்தும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பத்து நாள்கள் நடக்கும் பங்குனிப் பெருவிழாவே இத்திருக்கோயிலின் மிக முக்கியத் திருவிழா.
Add Comment