Home » இதுவா? அதுவா?
நம் குரல்

இதுவா? அதுவா?

இந்தியாவில் குறை சொல்லப் பல்லாயிரம் விஷயங்கள் உண்டு. ஆனால் சிலவற்றில் நம் மக்களின் உயரமே தனி.

இந்த ஆண்டு உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பொதுத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன, நடக்கவிருக்கின்றன. ஆனால் இந்தியப் பொதுத் தேர்தல் ஒட்டுமொத்த உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருப்பதைக் கவனியுங்கள். கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல் கட்டத் தேர்தல் தொடங்கியது. ஜூன் முதல் தேதி ஏழாவது கட்டத் தேர்தலுடன் இது நிறைவடைந்து, ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.

கிட்டத்தட்ட நூற்று நாற்பத்தைந்து கோடி மக்கள் தொகை உள்ள ஒரு தேசத்தில் பெரிதாக எந்தச் சிக்கலும் ஏற்படாமல் இவ்வளவு நிறுத்தி நிதானமாக, ஏழு கட்டங்களில் ஒரு தேர்தலை நடத்தி முடிக்க முடிகிறதென்றால், அது சாதாரண விஷயமல்ல.

தேர்தல் நடத்துவதில் மட்டுமல்ல. வாக்கு எண்ணப்படும் ஜூன் நான்காம் தேதிக்கும் மிக விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

உதாரணமாகத் தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம். முப்பத்தொன்பது தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் இப்போது முப்பத்தொன்பது வெவ்வேறு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஜூன் நான்காம் தேதியன்று இந்த இயந்திரங்களைத் தொகுதிவாரியாக 234 அறைகளுக்குக் கொண்டு சென்று எண்ண ஆரம்பிப்பார்கள். வாக்கு எண்ணப்படும் மேசைகளின் எண்ணிக்கை முதல், ஒவ்வொரு மேசையில் எண்ணப்படுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது வரை அங்குலம் விடாமல் சிந்தித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

எவ்வளவு திட்டமிடல், எவ்வளவு அர்ப்பணிப்பு, எத்தனை பேரின் உழைப்பு இதில் முதலீடாகியிருக்கும் என்று சிந்திக்கலாம்.

எல்லாம் எதற்காக?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • இதுவா அதுவா. மக்கள் நிச்சயம் சிந்திக்க வேண்டும் அது தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!