ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. ஹரியானாவில் பாரதிய ஜனதாவும் ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்றன. அதைப் பொய்யாக்கி பாரதிய ஜனதா வென்றுள்ளது.
வாக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் பார்த்தால் ஹரியானாவில் பாரதிய ஜனதாவும் காங்கிரஸ் கட்சியும் ஒரே அளவில்தான் வாக்குகளைப் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதாவுக்கு எதிரானவர்களின் வாக்குகளை மட்டும் குறிவைத்து தங்களின் வழக்கமான வாக்குகளை இழந்திருக்கிறது காங்கிரஸ்.
விவசாயச் சட்டமும் அதை எதிர்த்த போராட்டக்காரர்களை ஒன்றிய அரசு கையாண்ட விதமும் பரவலாக அதிருப்தியை உண்டாக்கியிருந்தன. வேறெதுவும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிராக ஓர் எதிர்ப்பு மனநிலை நிலவும். அதை ஒட்டி பரப்புரை மேற்கொண்டிருந்தாலே வெற்றி பெற்றிருக்கலாம். அதன் அடிப்படையில்தான் கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றன. அதையும் மீறி வென்று மூன்றாவது முறையாக ஹரியானாவில் ஆட்சியமைத்துள்ளது பாரதிய ஜனதா.
Add Comment