Home » உள்ளங்கையில் உளவாளி
நம் குரல்

உள்ளங்கையில் உளவாளி

ஜோதி மல்ஹோத்ரா

பாகிஸ்தான் உளவாளிகள் என்ற குற்றச்சாட்டின்பேரில் பன்னிரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணைகள், புலனாய்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் பல கைதுகள் நடக்கலாம். இன்னும் பலபேர் இப்படிச் சிக்கலாம். அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இதில் சிந்திப்பதற்கு ஒன்று உள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள பன்னிரண்டு பேரில் ஜோதி மல்ஹோத்ரா என்ற யூ ட்யூபர் ஒருவர். ஹரியானாவைச் சேர்ந்த இவர் முதலில் டெல்லியில் ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். பிறகு வேலையை விட்டுவிட்டு யூ ட்யூப் சேனல் ஆரம்பித்திருக்கிறார். ‘டிராவல் வித் ஜோ’ என்ற பெயரில் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்து படம் பிடித்து இவர் வெளியிட்டு வந்த விடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருந்திருக்கிறது. லட்சக்கணக்கான சந்தாதாரர்களை வைத்திருக்கிறார்.

இவையெல்லாம் சாதாரணமான விஷயங்கள். நாடெங்கும், உலகெங்கும் எவ்வளவோ பேர் செய்துகொண்டிருப்பவை. ஆனால், இந்தப் பெண் பாகிஸ்தானுக்குப் பலமுறை சென்று வந்து பயண விடியோக்களை வெளியிட்டிருக்கிறார். அவையும் லட்சக்கணக்கான பார்வைகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளன. எல்லா பயண யூட்யூபர்களையும் போலத்தான் அவரும் அந்த விடியோக்களில் பேசுகிறார், தேவைக்கு அதிகமாகப் பரவசப்படுகிறார், ஒன்றுமில்லாதவற்றுக்கு உணர்ச்சிவசப்படுகிறார். அந்த விடியோக்களைக் கொண்டு மட்டும் எந்த உண்மையையும் பெற்றுவிட இயலாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!