Home » முடிக்க விரும்பாத போர்
நம் குரல்

முடிக்க விரும்பாத போர்

இஸ்தான்புல்லில் கூடிய ரஷ்யா உக்ரைன் பிரதிநிதிகள் தலா ஆயிரம் வீரர்களை விடுவித்து அனுப்ப ஒப்பந்தம் செய்துள்ளனர். இறந்து போன ஆறாயிரம் வீரர்களின் எச்ச மிச்சங்களும் நாடு திரும்பும். நாநூறு உக்ரைன் குழந்தைகள் கடத்தப்பட்டதாகச் சொன்னதே உக்ரைன், அவர்களில் பத்து குழந்தைகள் திரும்ப வருகிறார்களாம். போர் நிறுத்தம்? அதெல்லாம் திட்டத்திலேயே இல்லை.

சுமார் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வருவதை அறிவோம். முதலாம் ஆண்டு மேற்குலகின் ஆயுத உதவி கிடைத்ததால் உரிமை, விடுதலை எனப் பேசிக் கொண்டிருந்தார் உக்ரைன் ​அதிபர். பேச்சு பெரிதாக இருந்தாலும் தொடர் வெற்றிகள் பெற்றதென்னவோ ரஷ்யாதான். பின்னர், உக்ரைன் பெற்றுக் கொண்டிருந்த ஆயுத உதவிகளில் ஏற்பட்ட தொய்வு போரிலும் பிரதிபலித்தது.

உக்ரைன் அதிபர் பிஸியாகவே இருந்தார். ஐரோப்பிய நாடுகளின் உதவியைக் கேட்டுக் கையேந்தினார். ஐநாவிடம் கோரிக்கை வைத்தார். உலக நாடுகளிடம் ஒப்பாரி வைத்தார். அமெரிக்காவுக்குப் போய் புதிய அதிபர் டிரம்பிடம் அவமானப்பட்டுத் திரும்பினார். அடடா, தன் நாட்டு மக்களுக்கு ஒரு விடிவுகாலம் வரவேண்டும் என்று இந்த மனிதர் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார் என மக்கள் நினைக்கும்படி சர்வதேச ஊடகங்கள் இவர் பின்னாலேயே சுற்றி செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன.

ரஷ்யாவின் அராஜகத்தை வெளிச்சமிட்டதில் எப்படியும் போர் நிறுத்தம் நோக்கிப் போகும் என்றும் மீட்புப் பணிகளைத் திட்டமிடுவார் எனவும் நினைத்தவர்கள் எண்ணத்தில் ட்ரோனை அனுப்பிக் கலைத்திருக்கிறார் ஜெலன்ஸ்கி. ஒன்றரை ஆண்டுகளாக அவர் போட்ட திட்டம் ரஷ்யா மீது ஆகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதுதான்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!