தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2026) பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கூட்டணி, பிரசாரம், உத்திகள் சார்ந்த ஆரம்பக் கட்டப் பணிகளில் கட்சிகள் தீவிரமாகியிருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டுப் பொதுத் தேர்தலில் வெளி மாநில வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவிருப்பதாக இங்குள்ள கட்சிகளும் அதன் தலைவர்களும் தொடர்ந்து பேசி வருவது ஒரு விவாதப் பொருளாகியிருக்கிறது.
இந்த ஆண்டு பிகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களை முன்னிட்டு அங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கைகள் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. பிகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் சுமார் ஆறரை லட்சம் பேரும் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளதாக இங்கே சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் அறுபத்தைந்து முதல் எழுபத்தைந்து லட்சம் வெளி மாநிலப் பணியாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று சொல்லப்படுமானால் அது மாநில அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்; பல தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற வழி வகுக்கும் என்பதே இங்குள்ள அரசியல்வாதிகளின் கவலை.
பொதுமக்களிடையே குழப்பம் கலந்த அச்சத்தை விளைவிக்கக்கூடிய இந்த விவகாரத்தைச் சிறிது உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் பிறந்த, இந்தியக் குடியுரிமை உள்ள ஒருவர், நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வசிக்கலாம். ஆனால் பணி நிமித்தம் தனது மாநிலத்தை விட்டு வேறொரு மாநிலத்துக்கு இடம்பெயர்வோர், அம்மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களிக்க இயலாது. அவருக்கு எங்கே வாக்குரிமை உள்ளதோ, அங்கே சென்றுதான் வாக்களிக்க முடியும். தமிழ்நாட்டிலேயே நெடுங்காலமாக வசிக்கும் ஒரு வெளி மாநிலத்தவர், குடும்பத்துடன் இங்கே குடியேறி இருந்தாரெனில், உரிய ஆவணங்களின் அடிப்படையில் அவர் வாக்காளர் அடையாள அட்டை பெற முடியும்; தேர்தலில் வாக்களிக்க முடியும். அதில் சந்தேகமில்லை. ஆனால் மேலே கண்ட சுமார் எழுபது லட்சம் பேரும் அப்படிக் குடும்பத்துடன் குடியேறியவர்களா?















Add Comment