மொத்தம் 365 சதுர கிலோமீட்டர் அளவுள்ள காஸா முனை, இன்று உலகின் மிகப் பெரிய திறந்தவெளி வதை முகமாக மாறியுள்ளது. இஸ்ரேலின் இரும்புப் பிடிக்குள் சிக்கியிருக்கும் இருபது லட்சம் பாலஸ்தீனர்களில் ஏறக்குறைய தொண்ணூறு சதவீதம் பேர் பட்டினிச் சாவு நிகழும் சூழலில் தினந்தோறும் செத்துப் பிழைத்து வருகின்றனர்.
ஹமாஸ் மீதான போரை இஸ்ரேல் தொடங்கியதிலிருந்து காஸாவில் இதுவரை சுமார் 60,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 21 மாதங்களில் மட்டும் இந்த எண்ணிக்கை. இடையில் 59 நாள்கள் போர்நிறுத்தம். பிறகு மீண்டும் தொடங்கிய தாக்குதல்கள் முன்பை விடத் தீவிரமடைந்துள்ளன.
ஹமாஸ் இயக்கத்தை ஒழிக்காமல் ஓயமாட்டோம் என்று சபதமெடுத்துக் களத்தில் இறங்கியிருக்கும் இஸ்ரேல், அதற்காகக் கையிலெடுத்துள்ள போர் உத்திதான் இப்போது ஒட்டுமொத்த உலகத்தின் கோபத்துக்கும், கண்டனத்துக்கும் காரணமாகியுள்ளது.















Add Comment