ஒரு மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து அறுபத்தைந்து லட்சம் பெயர்கள் நீக்கப்படுவது எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல. நீக்கப்பட்டவர்களின் பட்டியல், என்ன காரணங்களின் அடிப்படையில் அவர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற விவரம் ஆகியவை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். பட்டியலை வெளியிடுவதற்குத் தேர்தல் ஆணையம் தயங்குமானால் மக்களுக்குச் சந்தேகம் எழவே செய்யும். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கத்தான் செய்யும். ஊர்வலம், பேரணி, கண்டனக் கூட்டங்களெல்லாம் ஜனநாயகம் நமக்குத் தந்துள்ள எளிய கருவிகள். அவற்றைப் பயன்படுத்துவோரைத் தடுத்துக் கைது செய்வது எதிர்க்கட்சிகளின் மீதான அடக்குமுறை மட்டுமல்ல. ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்படும் வன்முறை.
நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை நீதி கேட்டு ஊர்வலமாகச் செல்ல முனைந்த ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா, கனிமொழி, டி.ஆர். பாலு, மஹுவா மொய்த்ரா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளை மொத்தமாகக் கைது செய்து, பேரணியைத் தடுத்து நிறுத்தியது நிச்சயமாக நியாயமான செயல் அல்ல.















இந்தியா எங்கே செல்கிறதோ! வஞ்சனை செய்வோருக்குத் தான் வாழ்வா?
வாக்குரிமை கேலி கூத்தாகிறதா?? கட்டுரை சிறப்பு.