Home » ஜிஎஸ்டி 2.0: தாக்கங்களும் எதிர்பார்ப்புகளும்
நம் குரல்

ஜிஎஸ்டி 2.0: தாக்கங்களும் எதிர்பார்ப்புகளும்

செப்டம்பர் 22ஆம் தேதி முதல் புதிய ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் நாடெங்கும் அமலுக்கு வந்துள்ளன. இது இந்திய மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நவராத்திரிப் பரிசு எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுமார் எட்டாண்டுகளுக்குப் பிறகு மறுசீரமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், இந்தியப் பொருளாதாரச் சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் வல்லமை படைத்தவை.

2017 ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஒரே சீரான ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு முன், 2000ஆம் ஆண்டில் முதன்முதலாக நாடெங்கும் ஒரேவிதமான பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்னும் ஜிஎஸ்டியைக் கொண்டு வருவதற்கான கருத்தாக்கம் விவாதிக்கப்பட்டது. மாநிலக் கட்சிகளின் எதிர்ப்புகள், பலகட்டப் பேச்சுவார்த்தைகள் எல்லாம் கடந்து அது நடைமுறைக்கு வரப் பதினேழு ஆண்டுகாலம் ஆனது.

அதற்கு முன்பு இந்தியாவில் மறைமுக வரிகள் பல அடுக்குகளாக, மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட விகிதங்களில் விதிக்கப்பட்டு வந்தன. இதனால் ஒரே பொருளை நாட்டில் பல பகுதிகளில் வசிப்பவர்கள் வெவ்வேறு விலைகளில் வாங்கக்கூடிய நிலை நிலவியது. இதை மாற்றி, நாடெங்கும் ஒரே விதமான, சமச்சீரான வரிவிதிப்பைக் கொண்டு வருவதற்கான திட்டம்தான் இந்த ஜிஎஸ்டி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!