கொடூரப் போரினால் சிதைந்துள்ள காஸாவில் அமைதிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள இருபது அம்சப் போர்நிறுத்த ஒப்பந்தத்துக்குச் சர்வதேச ஆதரவு வலுத்துள்ளது. இதனால் ஹமாஸ் ஆயுதப் போராட்டக் குழு மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.
கடந்த இரண்டாண்டுகளாக காஸாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான கடும் போரில் இதுவரை ஒன்றரை லட்சம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பல லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில் இடைவிடாத தாக்குதல்கள் சிக்கி காஸா நகரம் நரகமாக மாறியுள்ளது. உணவு, குடிநீர், மருத்துவச் சேவைகள் வினியோகம் ஏறக்குறைய முடங்கிவிட்டது.
கடந்த இரண்டாண்டுகளாக ஐநா சபையும், பல நாடுகளும், இயக்கங்களும் பல வகைகளிலும் முயன்று பார்த்தும், இருதரப்பும் போர்நிறுத்தத்துக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் வெகுண்டெழுந்த இஸ்ரேல், காஸாவை முற்றிலும் அழித்துவிட்டுதான் மறுவேலை எனத் தனது தாக்குதல்களை இப்போது அதிதீவிரமாக்கியுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி காஸா நகரத்திலும் ஜபாலியாவிலும் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் குறிவைத்துத் தகர்த்து வருகிறது இஸ்ரேல்.















Add Comment