Home » நிகரற்ற வெற்றி
நம் குரல்

நிகரற்ற வெற்றி

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி,  உலகக் கோப்பையை வென்றுள்ளது. வாழ்த்துவோம்.

வெற்றிக் கொண்டாட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மித்தாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி உள்ளிட்ட பலரையும் காணமுடிந்தது. உலகக் கோப்பையைக் கையில் வாங்கித் தலைக்கு மேல் உயர்த்திப் பிடித்த மித்தாலி, பேச முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருந்தார். நன்றி என்பதைத் தவிர வேறெதுவும் சொல்லவில்லை. மற்ற சீனியர் வீரர்களுமே உணர்ச்சிகரமான மனநிலையில்தான் இருந்தனர். உண்மையில் நன்றிக்கு உரியவர்கள் அவர்கள் அனைவரும் தாம்.

மித்தாலி ராஜ் கேப்டனாக இருந்து வழிநடத்திய அணி, 2005ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பையில் ரன்னர் அப் ஆக வந்தது. அந்தப் போட்டிக்கு அவர்கள் பெற்ற தொகை மேட்ச் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய். அதுகூட அந்தப் போட்டித் தொடருக்கு மட்டும்தான். மற்ற ஆட்டங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய்கூடக் கிடையாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!