Home » சிலிண்டர் சிந்தனைகள்
நம் குரல்

சிலிண்டர் சிந்தனைகள்

தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது. நியாயமாக நாட்டு மக்களின் மொத்தக் கவனமும் இதன்மீதுதான் இப்போது குவிந்திருக்க வேண்டும். ஆனால் எரிவாயுத் தட்டுப்பாடே எங்கும் பேசுபொருளாக உள்ளது. மக்களை நேரடியாக பாதிக்கும் இந்தப் பிரச்னைக்கு மேற்காசியப் போர்தான் காரணம் என்றாலும் தேர்தல் நேரத்தில் இது பல்வேறு விதமாக உருமாற்றம் கொள்ளும் சாத்தியங்கள் அதிகம். இப்போதே சில அரசியல் தலைவர்கள், சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு முதலமைச்சரைக் குற்றம் சொல்லும் நகைச்சுவைக் காட்சிகள் வரத் தொடங்கிவிட்டன. அடுத்த இரண்டு மாதங்களில் இன்னும் நிறைய பார்க்கத்தான் போகிறோம்.

இருக்கட்டும். இரான்-அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் அடிப்படையைத் தெரிந்துகொள்வது அவசியம். அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இரான் கையெழுத்திட மறுத்ததும், அதனால் அமெரிக்க- இஸ்ரேல் படைகள் இரான் மீது தாக்குதல் நடத்தியதும் தற்போதைய போர்ச் சூழலுக்குக் காரணம். இரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமெனி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனால் இஸ்ரேல் மீதும், மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீதும் இரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

போரை நிறுத்துவதற்கு இரான் மூன்று முக்கியமான நிபந்தனைகளை விதித்துள்ளது. இரானின் சட்டப்பூர்வமான உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும்; போர் மூலம் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; எதிர்காலத்தில் இரான் மீது தாக்குதல் நடத்தப்படாது எனச் சர்வதேச உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதிக்குப் போர்க் கப்பல்களை அனுப்புமாறு தனது நட்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது அமெரிக்கா. அவ்வாறு அனுப்பினால், வளைகுடா நாடுகளில் மட்டுமே நடக்கும் இந்தப் போர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவடையும் சூழல் உருவாகும். எனவே இப்போதைக்குப் போர் முடிவுக்கு வரும் சூழல் இல்லை. இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவைச் சந்தித்திருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!