தமிழர்கள் என்றில்லை. பொதுவாக மனிதர்கள் அனைவருமே மூன்று விஷயங்கள் சார்ந்து மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பார்கள். வேலை-வருமானம் முதலாவது. குடும்பம்-சுற்றம் அடுத்தது. மதம் உள்ளிட்ட சொந்த நம்பிக்கைகள், சார்புகள் மூன்றாவது. இந்த மூன்றில் எது ஒன்றின்மீது கல் விழுந்தாலும் உடனே பதற்றம் எழும். விழுகிற கல்லின் கனம், வேகத்துக்கேற்பக் கலவரம் உண்டாகும்.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பன்னிரண்டு மணி நேர வேலைத் திட்டம் சார்ந்த தீர்மானம் உண்டாக்கிய கலவர உணர்ச்சியை இப்போது நினைவுகூரலாம். அதன் மீதான மேல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்திருக்கும் சூழல்தான் இது குறித்து சிந்திக்க ஏற்ற தருணம்.
Add Comment