Home » தமிழ்நாடு அரசு

Tag - தமிழ்நாடு அரசு

நம் குரல்

இலவசப் பேருந்தும் எதிர்பாரா விளைவுகளும்

தமிழ்நாடு அரசின் இலவசப் பேருந்துப் பயணத்திட்டம், பெண்களின் மாதச் செலவு கணக்கிலிருந்து பேருந்துப் போக்குவரத்து கட்டணக் கவலையைப் போக்கியுள்ளது. முன்பெல்லாம் பேருந்தில் ஏறுவதற்கு முன்பே பயணச் செலவைக் கணக்கிட வேண்டியிருந்த பெண்களுக்கு அந்தக் கவலை தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. மருத்துவமனைக்குச்...

Read More
தமிழ்நாடு

இனி யானைகளுக்கு இல்லை வேலி

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 25 ரிசார்ட்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நடைபெற்று வரும் கட்டுப்படுத்தப்படாத சுற்றுலாச் சுரண்டலுக்கு எதிராகவும், யானை வழித்தடங்களைப் பாதுகாப்பது தொடர்பாகவும் தொடரப்பட்ட வழக்குகளில்...

Read More
நம் குரல்

மருந்தாகும் மக்கள் சேவை

மக்களுக்குக் குறைந்த விலையில் ஜெனிரிக் மருந்துகளை விற்பனை செய்யும் முதல்வர் மருந்தகங்களைத் திறந்துள்ளது தமிழ்நாடு அரசு. இதன் மூலம் மக்களின் மாதாந்திர செலவில் கணிசமாக மிச்சமாகும். உலகளாவிய மருந்துச் சந்தையில் இந்தியா பதிமூன்று சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இதன் தொடக்கம் 1970ல் அப்போதைய பிரதமர் இந்திரா...

Read More
நம் குரல்

வரலாறு காணாத பாகுபாடு

ஃபெஞ்சல் புயல் நின்று நிதானமாகக் கரையைக் கடந்து வலுவிழந்து விட்டது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தொன்பது உயிர்களைப் பலி கொண்டுள்ளது. மேற்கு நோக்கி நகர்ந்து வலுவிழந்ததால் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, விக்கிரவாண்டியும் கிருஷ்ணகிரியும் அதிகம்...

Read More
தமிழ்நாடு

திட்டமிட்ட வெற்றி! – எஸ்.ஆர். காந்தி

இந்தியாவில் இணையம் பிரபலமாகிய தருணத்தில் கணினியில் தமிழ் என்பதை முன்வைத்து ஒரு மாநாடு சென்னையில் நடந்தது. இப்போது செயற்கை நுண்ணறிவு பிரபலமாகும் நேரத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தேதிகளில் மீண்டும் மாநாடு நடத்தியுள்ளது தமிழ்நாடு அரசு. நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 8, 9, 10 தேதிகளில்...

Read More
நம் குரல்

பபாசிக்கு மணி கட்டுங்கள்

நாற்பத்தேழு ஆண்டுகளாகச் சென்னை புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. பபாசி என்கிற தனியார் அமைப்பு (தென்னிந்திய பதிப்பாளர்கள்-விற்பனையாளர்களின் கூட்டமைப்பு) நடத்தும் இந்தப் புத்தகக் காட்சி, ஆண்டுக்கொரு முறை ஜனவரி மாதத்தில் நடைபெறும். சென்னையின் மிகப்பெரிய கலாசார-பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாகக்...

Read More
நம் குரல்

எருமைகளா நாம்?

வேங்கை வயல் விவகாரம் அளித்த அதிர்ச்சியே இன்னும் நினைவை விட்டு நகராத நிலையில் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் சிலர் சக (பட்டியலின) மாணவனையும் அவனது சகோதரியையும் அரிவாளால் வெட்டியிருக்கும் சம்பவம் நடந்தேறியிருக்கிறது. 16-17 வயது இளைஞர்களின் மனத்தில் சாதிய வன்மம் அந்தளவுக்கு ஆழமாக ஊன்றப்பட்டிருப்பதை...

Read More
நம் குரல்

திமுகவும் நீட் எதிர்ப்பு விளையாட்டுகளும்

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைந்தன. இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வுகள் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றன. அரசைக் குறை சொல்வதல்ல நோக்கம். நடைமுறை சாத்தியமில்லாத ஒன்றைத் தேர்தல் வாக்குறுதியாகத் தரும்போது ஆய்ந்து தெளிய வேண்டியது மக்கள் பொறுப்பே. அதைச் செய்ய விடுத்து...

Read More
நம் குரல்

தவறுகளின் தொடக்கப் புள்ளி

தமிழர்கள் என்றில்லை. பொதுவாக மனிதர்கள் அனைவருமே மூன்று விஷயங்கள் சார்ந்து மிகுந்த எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பார்கள். வேலை-வருமானம் முதலாவது. குடும்பம்-சுற்றம் அடுத்தது. மதம் உள்ளிட்ட சொந்த நம்பிக்கைகள், சார்புகள் மூன்றாவது. இந்த மூன்றில் எது ஒன்றின்மீது கல் விழுந்தாலும் உடனே பதற்றம் எழும்...

Read More
நம் குரல்

மாண்டஸ் புயலும் ‘சில’ விமர்சனங்களும்!

‘நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா?’ என்று கேட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. கூடவே,‘கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர்களைக் கையாண்டு சாதனை படைத்தது அதிமுக அரசு’ என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார். நல்லது. ஆனால், 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையின்போது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!