இந்தக் கோடை வழக்கத்துக்கு விரோதமாகப் பலவிதமான உக்கிர முகங்களைக் காட்டுகிறது. 105, 106, 107 பாகை அளவுகளையெல்லாம் நமது மாநிலம் கண்டு மீண்ட சரித்திரம் உண்டு. ஆனால் நூறு பாகையைத் தொடும்போதே இம்முறை வெளியே தலை காட்ட முடியாதிருக்கிறது. வெப்ப அலை என்கிறார்கள். வேறு பலவும் சொல்கிறார்கள். மொத்த உலகமுமே பருவநிலைக் குளறுபடிகளுக்கு உள்ளாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஒன்றும் செய்வதற்கில்லை. சமாளித்துத்தான் தீர வேண்டும். இந்த நேரத்தில் கடும் புயல்-மழைக் காலங்களில் தமிழ்நாட்டு அரசு மேற்கொள்ளும் தற்காப்பு மற்றும் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் நினைவுக்கு வருகின்றன. வெள்ளம் வந்துவிட்டாலும் மீட்புப் பணியில் காட்டுகிற அக்கறை நினைவுகூரத் தக்கதே.
ஆனால், இயற்கைப் பேரிடர் என்றால் அது புயல்-மழை மட்டுமல்ல. கொடும் வெயிலும் இயற்கைப் பேரிடர்தான்.
உண்மை தான் ஐயா.